டட்சன் ரெடி-கோ கார் ஜூன் 7 முதல்

வருகின்ற ஜூன் 7 ,2016 முதல் டட்சன் ரெடி-கோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரெடி-கோ காரின் மைலேஜ் லிட்டருக்கு 25.17 கிமீ ஆகும். க்விட் ஆல்ட்டோ 800 மற்றும் இயான் போன்ற கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

datsun-redigo

க்விட் காரின் CMF-A தளத்திலே உருவாக்கப்பட்டுள்ள ரெடி-கோ கார் க்ராஸ்ஓவர் மற்றும் ஹேட்ச்பேக் கார்களின் கலவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரெடி-கோ காரில் 54 hp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 800சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 72 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ads

ஸ்டைலிசான தோற்ற அமைப்பில் க்ராஸ்ஓவர் கார்களுக்கு இணையாக வடிவமைப்பட்டுள்ள ரெடி-கோ காரில் பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் , முன்பக்க பவர் வின்டோஸ் , பவர் ஸ்டீயரிங் மற்றும் ஆடியோ சிஸ்டத்தில் சிடி , ரேடியோ ,யூஎஸ்பி மற்றும் ஆக்ஸ் போன்றவற்றை இணைத்துள்ளது.

க்விட் , இயான் மற்றும் ஆல்ட்டோ 800 போன்ற பிரசத்தி பெற்ற கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ள ரெடிகோ காரின் விலை ரூ. 2.60 லட்சம் முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டட்சன் ரெடி-கோ சிறப்பு பார்வை

[envira-gallery id=”7303″]

Comments