டாடா ஏஸ் மெகா மினி டிரக் விற்பனைக்கு வந்தது

டாடா ஏஎஸ் டிரக்கின் புதிய டாடா ஏஸ் மெகா மாடல் ரூ.4.31 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. டாடா ஏஸ் மெகா டிரக் ஆனது  ஏஸ் HT மற்றும் சூப்பர் ஏஸ் மாடலுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

டாடா ஏஸ் மெகா
டாடா ஏஸ் மெகா

சின்ன யானை என்று செல்ல பெயருடன் அழைக்கப்படும் டாடா ஏஸ் சிறிய ரக வர்த்தக வாகனத்தின் புதிய ஏஸ் மெகா டிரக்கில் 1030 கிலோ வரை எடைதாங்கும் திறனை பெற்றுள்ளது.

1 டன் எடை தாங்கும் திறனை கொண்ட டாடா ஏஸ் மெகா டிரக்கில் 40எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4 வது தலைமுறை 800சிசி DiCOR டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 94என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

டாடா ஏஸ் மெகா மினி டிரக்கின் மைலேஜ் லிட்டருக்கு 18.5கிமீ ஆகும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 90கிமீ ஆகும்.

ads

லோட் பாடியின் நீளம் 2140மிமீ அகலம் 1430மிமீ மற்றும் உயரம் 300மிமீ ஆகும். ஏஎஸ் மெகா நீல வண்ணத்தில் மட்டும் கிடைக்கும். ஏஎஸ் மெகா டிரக்கில் அழகான ஸ்டிக்கரிங் வேலைப்பாடு , பாடி வண்ண முகப்பு பம்பர் போன்றவற்றை பெற்றுள்ளது. உட்புறத்தில் டிஜிட்டல் கிளாக் , லாக்கெபிள் குளோவ் பாக்ஸ் ஆடியோ சிஸ்டம் மற்றும் மொபைல் சார்ஜிங் வசதி போன்றவை உள்ளது.

டாடா ஏஸ் மெகா மினி டிரக்
டாடா ஏஸ் மெகா மினி டிரக்

முதற்கட்டமாக தமிழ்நாடு , உத்திரப்பிரதேசம் , ஓடிசா , பிகார் , மேற்கு வங்காளம் , பிகார் ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசம் போன்ற 7 மாநிலங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

டாடா ஏஸ் மெகா டிரக் விலை ரூ.4.31 லட்சம் (Ex-showroom Thane)

Tata Ace Mega Mini Truck launched

Comments