டாடா நெக்ஸான் எஸ்யூவி எஞ்சின் விபரம் வெளியானது!

வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வெளியிப்பட உள்ள டாடா நெக்ஸான் எஸ்யூவி மாடலின் எஞ்சின் தொடர்பான முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளது. டிகோர் மற்றும் டியாகோ வெற்றியை தொடர்ந்து நெக்ஸான் களமிறங்குகின்றது.

 டாடா நெக்ஸான் எஸ்யூவி

டாடா நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக வெளிவரவுள்ள நெக்ஸான் எஸ்யூவி மாடலில் புதிய ரெவோட்ரான் மற்றும் ரெவோடார்க் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

ads

நெக்ஸ்ட்-ஆன் அதாவது இதன் சுருக்கமே நெக்ஸான் என கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட மாடல் மிக சிறப்பான செயல்திறன் மிக்க பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களை பெற்றிருப்பதுடன் பல்வேறு சிறப்பு அம்சங்களையும் கொண்டதாக இருக்கும்.

 நெக்ஸான் எஞ்சின்

டியாகோ மற்றும் டீகோர் போன்ற மாடல்களில் இடம்பெற்றிருந்த அதே ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்ற எஸ்யூவிக்கு ஏற்ற வகையில் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரெவோடார்க் வரிசையில் புத்தம் புதிதாக வரவுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு எஞ்சினிலும்  6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.ஆட்டோமேட்டிக் மாடல் பற்றி எந்த விபரமும் வழங்கப்படவில்லை.மைலேஜ் விபரம் தொர்பான தகவலும் வழங்கப்படவில்லை என்றாலும் , மிக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காம்பேக்ட் ரக எஸ்யூவி சந்தையில் முன்னிலை வகிக்கும் விட்டாரா பிரெஸ்ஸா, இக்கோஸ்போர்ட், டியூவி300 இதுதவிர க்ரெட்டா மற்றும் டஸ்ட்டர் போன்றவற்றுக்கும் சவாலாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments