டாடா போல்ட் ,ஸெஸ்ட் , நானோ , சஃபாரி , இன்டிகோ சிறப்பு பதிப்பு அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் போல்ட் ,ஸெஸ்ட் ,  நானோ , சஃபாரி  மற்றும் இன்டிகோ என அனைத்து முக்கிய மாடல்களிலும் செலிபிரேஷன் எடிசனை பண்டிகை காலத்தினை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது.

டாடா சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவி
டாடா சஃபாரி ஸ்டோர்ம்

விழாகாலத்தை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும்  கூடுதல் வசதிகளை இனைத்து சிறப்பு பதிப்புகளை வெளியிட்ட வருகின்றனர். டாடா மோட்டார்ஸ்   போல்ட் ,ஸெஸ்ட் ,  ஜென்எக்ஸ் நானோ , சஃபாரி  மற்றும் இன்டிகோ என அனைத்திலும் சிறப்பு பதிப்பினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

டாடா சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவி

டாடா சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவி காரின் சிறப்பு பதிப்பில் பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்கு , நேவிகேஷன் சிஸ்டம் , ஹூட் ஸ்கூப் , ஹூட் டிஃபிளேக்டர் , டோர் வைசர் , செலிபிரேஷன் எடிசன் பாடி கிராஃபிக்ஸ் மற்றும் பேட்ஜ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த துனைகருவிகளின் மதிப்பு ரூ.37,500 ஆகின்றது. ஆனால் ஆஃபரில் வாங்குவதனால் ரூ.34,999 செலுத்தினால் போதும்.

டாடா ஸெஸ்ட்

டாடா ஸெஸ்ட் ஆனிவர்ஷரி எடிசனே செலிபிரேஷன் எடிசனாக தொடர்கின்றது. புதிய வண்ணம் , கருப்பு நிற ரியர் வியூ மிரர் , ரிமோட் கன்ட்ரோல் பின்புற கர்டைன் ஸ்கிரின் , ஆனிவர்சரி பேட்ஜ் போன்றவை பெற்றுள்ளது. இந்த துனைகருவிகளின் மதிப்பு ரூ.31,000 ஆகின்றது. ஆனால் ஆஃபரில் வாங்குவதனால் ரூ.15,000 செலுத்தினால் போதும்.
டாடா ஸெஸ்ட்

டாடா போல்ட்

போல்ட் செலிபிரேஷன் எடிசன் ஸ்போர்ட்டிவாக உள்ளது. மேற்கூரை , சி பில்லர் மற்றும் ஹூட் மேல் கருப்பு ஃபினிஷ் ஸ்டிக்கர் , ரியர் ஸ்பாய்லர் , ஸ்கஃப் பிளேட் மற்றும்  செலிபிரேஷன் எடிசன் பாடி கிராஃபிக்ஸ் மற்றும் பேட்ஜ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த துனைகருவிகளின் மதிப்பு ரூ.17,800 ஆகின்றது. ஆனால் ஆஃபரில் வாங்குவதனால் ரூ.12,900 செலுத்தினால் போதும்.
டாடா போல்ட்

டாடா ஜென்எக்ஸ் நானோ

டாடா ஜென்க்ஸ் நானோ காரில் இரண்டு விதமான வேரியண்டில் செலிபிரேஷன் எடிசன் கிடைக்கின்றது. அவை ஸ்டான்டர்டு மற்றும் பிரிமியம் ஆகும்.
ஜென்க்ஸ் நானோ ஸ்டான்டர்டு
டாடா ஜென்க்ஸ் நானோ ஸ்டான்டர்டு செலிபிரேஷன் எடிசனில் ரிமோட் கன்ட்ரோல் , சிறப்பு டிசைன் இருக்கை உறை , பம்பர் கார்னர் புராடெக்டர் , செலிபிரேஷன் எடிசன் பாடி கிராஃபிக்ஸ் மற்றும் பேட்ஜ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த துனைகருவிகளின் மதிப்பு ரூ.11,500 ஆகின்றது. ஆனால் ஆஃபரில் வாங்குவதனால் ரூ.10,500 செலுத்தினால் போதும்.
டாடா ஜென்க்ஸ் நானோ
ஜென்க்ஸ் நானோ பிரிமியம்
டாடா ஜென்க்ஸ் நானோ பிரிமியம் செலிபிரேஷன் எடிசனில்  ரிமோட் கன்ட்ரோல் , சிறப்பு டிசைன் இருக்கை உறை , பம்பர் கார்னர் புராடெக்டர் , செலிபிரேஷன் எடிசன் பாடி கிராஃபிக்ஸ் மற்றும் பேட்ஜ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த துனைகருவிகளின் மதிப்பு ரூ.27,000 ஆகின்றது. ஆனால் ஆஃபரில் வாங்குவதனால் ரூ.24,999 செலுத்தினால் போதும்.

டாடா இன்டிகோ

டாடா இன்டிகோ காரில் இரண்டு விதமான வேரியண்டில் செலிபிரேஷன் எடிசன் கிடைக்கின்றது. அவை ஸ்டான்டர்டு மற்றும் பிரிமியம் ஆகும்.
டாடா  இன்டிகோ ஸ்டான்டர்டு
டாடா  இன்டிகோ ஸ்டான்டர்டு செலிபிரேஷன் எடிசனில் இருக்கை உறை , ஸ்டீயரிங் வீல் கவர் , டிரைவ் கிட் , மட் ஃபிளாப் , மேட் செலிபிரேஷன் எடிசன் பாடி கிராஃபிக்ஸ் மற்றும் பேட்ஜ் இணைக்கப்பட்டுள்ளது.  இந்த துனைகருவிகளின் மதிப்பு ரூ.11,050 ஆகின்றது. ஆனால் ஆஃபரில் வாங்குவதனால் ரூ.7,000 செலுத்தினால் போதும்.
டாடா  இன்டிகோ
டாடா  இன்டிகோ பிரிமியம்
டாடா  இன்டிகோ பிரிமியம் செலிபிரேஷன் எடிசனில் ஆடியோ சிஸ்டம் , இருக்கை உறை , ஸ்டீயரிங் வீல் கவர் , டிரைவ் கிட் , மட் ஃபிளாப் , மேட் செலிபிரேஷன் எடிசன் பாடி கிராஃபிக்ஸ் மற்றும் பேட்ஜ் இணைக்கப்பட்டுள்ளது.  இந்த துனைகருவிகளின் மதிப்பு ரூ.16,950 ஆகின்றது. ஆனால் ஆஃபரில் வாங்குவதனால் ரூ.10,000 செலுத்தினால் போதும்.
டாடா சிறப்பு ஆஃபர்
டாடா கார்களில் ஏதேனும் ஒன்றை வாங்கினால் கேஷ்பேக் ஆஃபரை வழங்க உள்ளது. குறைந்தபட்சம் ரூ.2000 முதல் ரூ.50,000 வரையிலான் பேஷ் பேக் பெறலாம் மேலும் சில வாடிக்கையாளர்களுக்கு 50 % அல்லது 100 % பணத்தினை திரும்பெறலாம்.
டாடா சிறப்பு ஆஃபர்
Tata Motors launched celebration edition in all models

Comments