டிவிஎஸ் அகுலா 310 படங்கள் வெளியானது

வருகின்ற ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள புதிய டிவிஎஸ் அகுலா 310 ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட பைக் மாடலின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

டிவிஎஸ் அகுலா 310

  • பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை அடிப்படையாக கொண்ட ஃபேரிங் ரக மாடலாகும்.
  • ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
  • 34 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

ads

முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக வரவுள்ள அகுலா 310 மாடல் பிஎம்டபிள்யூ -டிவிஎஸ் கூட்டணியில் உருவாக்கப்பட உள்ள இந்த மாடல் ஓசூர் ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த பைக் மாடலில் 34 bhp ஆற்றலுடன் , 28Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 313சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளியிடப்பட்ட அகுலா 310 கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கின்ற இந்த பைக்கின் முகப்பில் புராஜெக்டர் முகப்பு விளக்குடன் கூடிய மிக நேர்த்தியான முகப்பில் வின்ட்ஷீல்டு அமைப்பு போன்றவற்றுடன் எல்இடி ரன்னிங் விளக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

முன் மற்றும் பின்புறங்களில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் முழு டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் ஆப்ஷனை பெற்றதாக விளங்குகின்றது. யூஎஸ்டி ஃபோர்க்குகள் , பின்புறத்தில் ரேஸ் சஸ்பென்ஷன் , ரேடியல் காலிப்பர் , ஹை ஸ்டீஃப் ஸ்பேஸ் ஃபிரேம் சேஸீ , டிஜிட்டல் கன்சோல் , ஹீட் மேனேஜ்மென்ட் அமைப்பு , ஆன் போர்டு gyro கேமரா , ஸ்டீயரிங் டேம்பர் போன்றவற்றையும் பெற்றதாக வரவுள்ளது.

டிவிஎஸ் அகுலா 310 அல்லது அப்பாச்சி 300 பைக் விலை ரூ. 1.90 லட்சம் விலையில் தொடங்கப்படலாம்.

like us on fb.com/automobiletamilan

Comments