டிவிஎஸ் அப்பாச்சி 300 பைக் வருகை எப்பொழுது ?

டிவிஎஸ் அகுலா 310 என காட்சிப்படுத்தபட்ட அகுலா 310சிசி முழுதும் அலங்கரிக்கப்பட்ட கான்செப்ட் பைக் மாடலை டிவிஎஸ் அப்பாச்சி 300 என பெயரிடப்பட வாய்ப்புகள் உள்ள நிலையில் விற்பனைக்கு வருகின்ற மார்ச் 2017க்குள் வெளியாகும்.

 

ads

விரைவில் சந்தைக்கு வரவுள்ள டிவிஎஸ்-பிஎம்டபுள்யு மோட்டார்டு கூட்டணியில் உருவான பிஎம்டபுள்யூ ஜி310 ஆர் பைக்கின் முழுதும் அலங்கரிக்கப்பட்ட அதாவது ஃபுல் பேரிங் செய்யப்பட்ட மாடலாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 பைக் விளங்கும்.

டிவிஎஸ் ஓசூர் தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ G310 R ஸ்போர்ட்டிவ் நேக்டூ பைக் பல வெளிநாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. சமீபத்தில் ஜி310 ஆர் இணையம் செயல்பட துவங்கியுள்ளது. ஆனால் இதில் இந்தியா இடம்பெறவில்லை. 34 bhp ஆற்றல் மற்றும் டார்க் 28 Nm வெளிப்படுத்தும் 313சிசி இஞ்ஜினே டிவிஎஸ் அப்பாச்சி 300 பைக்கில் இடம்பெற உள்ளது.

 

ஜி310 ஆர் பைக்கின் அடிப்படையிலான முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக வரவுள்ள அப்பாச்சி 300 பைக் மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை கொண்டதாக விளங்கும் பைக்கில் முன்பக்கத்தில் யூஎஸ்டி ஃபோர்க்குகள் , பின்புறத்தில் ரேஸ் சஸ்பென்ஷன் , ரேடியல் காலிப்பர் , ஹை ஸ்டீஃப் ஸ்பேஸ் ஃபிரேம் சேஸீ , டிஜிட்டல் கன்சோல் , ஹீட் மேனேஜ்மென்ட் அமைப்பு , ஆன் போர்டு gyro கேமரா , ஸ்டீயரிங் டேம்பர் போன்றவற்றை கொண்டிருக்கும்.

கேடிஎம் RC390 , யமஹா R3 மற்றும் கவாஸாகி நின்ஜா 300 போன்ற பைக்குகளுடன் நேரடியான சவாலினை ஏற்படுத்தும் மாடலாக டிவிஎஸ் அப்பாச்சி RTR 300 4V விளங்கும். வருகின்ற 2017 ஆம் ஆண்டின் மாரச் மாத மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள  அகுலா 310 விலை ரூ. 1.80 லட்சத்தில் அமையலாம்.

TVS Akula 310 concept photo gallery

[envira-gallery id=”7125″]

Comments