டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 புதிய நீல வண்ணத்தில்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கில் புதிய மேட் நீல வண்ணத்தில் பண்டிகை காலத்தினை முன்னிட்டு சிறப்பு பதிப்பாக வந்துள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 நீல வண்ணம் சேவை மையங்களுக்கு வந்து சேர்ந்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160

புதிய வண்ணத்தில் பாடி கிராஃபிக்ஸ் போன்றவை மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளது. மற்றபடி அப்பாச்சி RTR 160 மற்றும் ஆர்டிஆர் 180 பைக்கில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை.

15.2 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 160சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 13.1என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார் ஸ்பீடு மணிக்கு 118கிமீ ஆகும்.

வண்ணங்களை தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லை என்றாலும் விலை விபரங்கள் இன்னூம் அறிவிக்கப்பட வில்லை. புதிய நீல வண்ணத்தின் விலை ரூ.1000 முதல் 2500 வரை கூடுதலாக இருக்கலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160
ads

டிவிஎஸ் ஆப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக் விலை ரூ. 73,459 (சென்னை எக்ஸ்ஷோரூம்).

புதிய டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

TVS Apache RTR 160 gets New Matte Blue colour

Comments