டிவிஎஸ்-யை வீழ்த்திய பஜாஜ் 3வது இடத்தில்

கடந்த இரண்டு வருடங்களாக நான்காவது இடத்தில் இருந்து வந்த பஜாஜ் ஆட்டோ அதிரடியாக டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தினை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்துக்கு அதிரடியாக முன்னேறியுள்ளது.

Bajaj-Avenger-Cruise-220-Desert-Gold-side

ஸ்கூட்டர்களின் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வந்தாலும் எவ்விதமான ஸ்கூட்டர் மாடல்களையும் அறிமுகம் செய்யும் திட்டமில்லாமல் மோட்டார்சைக்கிள்களை கொண்டே மிக சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும் புனே பஜாஜ் ஆட்டோ கடந்த சில மாதங்களில் அதிரடியாக அறிமுகம் செய்த பஜாஜ் அவென்ஜர் , வி15  , சிடி100 , சிடி100பி போன்ற பைக்குகள் நல்ல வரவேற்பினை அளித்துள்ளது.

ads

ஓசூரில் இருந்து செயல்படும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஜூன் 2014யில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தினை கைப்பற்றியது. தற்பொழுது கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2,00,433 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இதே காலத்தில் டிவிஎஸ் மோட்டார்ஸ் 1,97,692 பைக்குளை விற்பனை செய்துள்ளது.

bajaj-v15-white-color

ஸ்கூட்டர் விற்பனையில் 28 % வளர்ச்சி பெற்றுள்ள டிவிஎஸ் நிறுவனம் ஸ்கூட்டர் மாடல்களே விற்பனை செய்யாத பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடன் ஈடுகட்ட முடியாத காரணமே பஜாஜ் அவென்ஜர் வரிசை பைக்கின் அவென்ஜர் 220 க்ரூஸ் , அவென்ஜர் 220 ஸ்டீரிட் மற்றும் அவென்ஜர் ஸ்டீரிட் 150 மேலும் ஐஎன்எஸ் விக்ராந்த போர்கப்பலின் மெட்டல் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பஜாஜ் வி15 பெரும் வரவேற்பினை பெற்று அதிரவைத்துள்ளது. இதுதவிர குறைந்த விலை தொடக்கநிலை மாடல்களான பஜாஜ் சிடி100 மற்றும் சிடி100பி போன்ற பைக்குகள் கூடுதல் பலத்தினை வழங்கியுள்ளது.

மேலும் படிங்க ; பஜாஜ் அவென்ஜர் 150 ஸ்டீரிட் வாங்கலாமா ?

Comments