டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் சிஸ்ட்டி2 , ஃபிளாட் டிராக் புரோ பைக்குகள் அறிமுகம்

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசையில் சிஸ்ட்டி2 மற்றும்  ஸ்க்ராம்ப்ளர் ஃபிளாட் டிராக் புரோ என்ற இரு மாடல்களை இத்தாலியின் டுகாட்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வரும் 2016 மிலன் EICMA மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் சிஸ்ட்டி2 மற்றும்  ஃபிளாட் டிராக் புரோ மாடல்கள் காட்சிக்கு வரவுள்ளது. டுகாட்டி ஸ்கிராம்பளர் வரிசையில் தற்பொழுது ஐகான் , கிளாசிக் , ஃபுல் திராட்டிள் , அர்பன் என்ட்ரோ , புதிய மாடல்களான சிஸ்ட்டி2 மற்றும்  ஃபிளாட் டிராக் புரோ ஆகியவை உள்ளது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் சிஸ்ட்டி2

டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் சிஸ்ட்டி2 பைக்கில் 41 ஹெச்பி ஆற்றலை வழங்கும் 399சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது. சிஸ்ட்டி2 பைக்கின் முன்புறத்தில் 41மிமீ ஃபோர்க்குகளுடன் ஸ்டீல் டியூப் ஸ்விங்கிராம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

14 லிட்டர்  கொள்ளளவு கொண்ட ஸ்டீல் எரிபொருள் டேங்கினை பெற்றுள்ளது. கருப்பு வண்ண புகைப்போக்கியை பெற்றுள்ள சிஸ்ட்டி2 பைக்கின் எடை 167கிலோ ஆகும். கிரே , கருப்பு மற்றும் டேங்கிரின் வண்ணங்களில் கிடைக்கும். மிக குறைவான விலை கொண்ட ஸ்க்ராம்ப்ளர் மாடலாக விளங்கும்.

டுகாட்டி ஃபிளாட் டிராக் புரோ

சிஎன்சி இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட பாகங்களை கொண்டுள்ள ஃபிளாட் டிராக் புரோ பைக்கில் 75 ஹெச்பி ஆற்றலை வழங்கும் 803சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 
மஞ்சள் வண்ணத்தில் அமைந்துள்ள ஃபிளாட் டிராக் புரோ மாடலில் அலுமினிய அலாய் வீல் , ஃபுல் திராட்டிள் புகைப்போக்கி , பிரத்யேக் இருக்கை , எரிபொருள் டேங்க் என பல அம்சங்களை கொண்டுள்ளது.
இந்தியாவில் ஐகான் , கிளாசிக் , ஃபுல் திராட்டிள் மற்றும் அர்பன் என்ட்ரோ போன்ற டுகாட்டி ஸ்க்ராம்பளர் வரிசை மாடல்கள் விற்பனையில் உள்ளன.

Comments