டெல்லியில் லம்போர்கினி கல்லார்டோ எரிந்து சாம்பல்

டெல்லியில் லம்போர்கினி கல்லார்டோ சூப்பர் கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியுள்ளது. லம்போர்கினி வரலாற்றில் மிக அதிகமாக விற்பனையான கார் என்றால் கல்லார்டோ தான்.

லம்போர்கினி கல்லார்டோ
கடந்த 2003ம் ஆண்டு முதல் சந்தையில் இருந்த கல்லார்டோ கடந்த 2013ம் ஆண்டு விடைபெற்று கொண்டது . உலகில் மொத்தம் 14022 கார்கள் விற்பனை ஆகியுள்ளது. அவற்றில் 85 கார்கள் இந்தியாவில் உள்ளது.  லம்போர்கினி  கல்லார்டோ காருக்கு மாற்றாக லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் கார் வந்தது.
இந்தியாவில் கடந்த சில வருடங்களில் மூன்று லம்போர்கினி கல்லார்டோ கார்கள் பெரிய விபத்துகளை சந்தித்துள்ளது. முதல் விபத்து சிறப்பு கல்லார்டோ கார் முற்றிலும் சேதமாகி ஓட்டுநரின் உயிரை பறித்தது. அதனை தொடர்ந்து டெல்லி 5 நட்சத்திர ஓட்டல் ஓட்டுநரால் கார் முற்றிலும் சேதமடைந்தது. 
தற்பொழுது டெல்லியில் உள்ள பதர்பூர் பகுதியில் நடைபெற்றுள்ள விபத்தில் என்ஜின் அறையில் இருந்த எரிய தொடங்கி உள்ளதால் ஓட்டுநர் உயிர் தப்பியுள்ளார்.
560பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 5.2 லிட்டர் வி10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. லம்போர்கினி கல்லார்டோ காரின் விலை ரூ.2.70 கோடியில் விற்கப்பட்டது.
லம்போர்கினி கல்லார்டோ
இது சூப்பர் கார் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீப்படிக்க காரணம் என்பது விசாரணையில் தெரிய வரும்.
Lamborghini Gallardo caught fire in India

Comments