டொயோட்டா இன்னோவா நவம்பர் 23 அறிமுகம் – 2016

புதிய டொயோட்டா இன்னோவா வரும் நவம்பர் 23ந் தேதி உலகிற்க்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. 2016 டொயோட்டா இன்னோவா முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் பிரிமியம் அம்சங்களுடன் சொகுசு காருக்கு இணையாக விளங்கும்.

டொயோட்டா இன்னோவா
டொயோட்டா இன்னோவா

புதிய இன்னோவா எம்பிவி காரில் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய என்ஜினில் இரண்டு விதமான டிரைவிங் மோட் இருக்கும் ஸ்போர்ட் மற்றும் இகோ ஆகும். பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷனில் வரவுள்ளது.

2016 டொயோட்டா இன்னோவா காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்திய சந்தைக்கு பெட்ரோல் மாடல் வருமா என்பது உறுதியாகவில்லை.

புதிய டொயோட்டா இன்னோவா காரில் புதிய 2.4 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தபட்டடிருக்கும்.  இதன் ஆற்றல் 150எச்பி மற்றும் டார்க் 400என்எம் ஆகும்.  இதே என்ஜின் புதிய தலைமுறை ஃபார்ச்சூனர் காரிலும் உள்ளது. ஆனால் ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரை விட ஆற்றல் குறைவாக இருக்கலாம். டீசல் வேரியண்டில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கும்.

ads

புதிய இன்னோவா எம்பிவி காரின் ஆட்டோமேட்டிக் டீசல் வேரியண்டில்  இரண்டு விதமான டிரைவிங் மோட் ஆப்ஷன் இருக்கும். ஸ்போர்ட் மோடில் சிறப்பான செயல்திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கலாம். இகோ மோடில் சிறப்பான மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்.

புதிய தலைமுறை இன்னோவா காரில் இரண்டு முன்பக்க காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் , இபிடி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தரமாக இருக்கும். மேலும் டாப் வேரியண்டில் 6 அல்லது 7 காற்றுப்பைகள் இருக்கலாம்.

புதிய டொயோட்டா இன்னோவா உலக அரங்கில் வரும் நவம்பர் 23ந் தேதி இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் புதிய இன்னோவா வரும் 2016ம் ஆண்டின் மத்தியில் சந்தைக்கு வரும்.

புதிய இன்னோவா தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலைவிட குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் கூடுதலாக இருக்கலாம். மேலும் டாப் வேரியண்ட் ரூ.2 லட்சம் வரை கூடுதலாக இருக்கும்.

All New Toyota Innova world debut on November 23 , 2015 

Comments