டொயோட்டா உதிரிபாகங்கள் ஆன்லைனில் கிடைக்கும்

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக இணையதளத்தில் உதிராபாகங்கள் மற்றும் ஆக்சரீஸ்களை விற்பனை செய்ய தொடங்கி உள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக 400க்கு மேற்பட்ட முக்கிய உதிரிபாங்கள் மற்றும் 30க்கு மேற்பட்ட துனைகருவிகளை ஆன்லைன் வழியாக வாங்கி கொள்ளும் வசதியை தந்துள்ளது.

பிரேக் பேட் , பிரேக் ஷூ , கிள்ட்ச் பிளேட் , ஆயில் ஃபில்டர் , ஏர் ஃபில்டர் , ஃப்யூவல் ஃபில்டர் சாக் அப்சார்பர் , வைப்பர் , விளக்குகள் மற்றும் கார் கவர் , மட் ஃபிளாப் , பம்பர் கார்னிஷ் போன்ற துனை கருவிகளும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Toyota Kirloskar Motor launched First OEM online shop

குவாலிஸ் முதல் லேண்ட் க்ரூஸர் வரை தனது அனைத்து மாடல்களுக்கும் இந்த இணையத்தில் விற்பனை செய்ய உள்ளது. முதற்கட்டமாக பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை மற்ற நகரங்களுக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ads

இந்தியாவின் டிஜிட்டல் உலகம் மிக வேகமாக வளர்ந்து வருவதனை கருத்தில் கொண்டு இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. டேப் , ஸ்மார்ட்ஃபோன் மற்றும் லேப்டாப்களில் இணைய பயன்பாடு அதிகரித்து வருவதால் காலத்திற்க்கேற்ப இணைய வழி அங்காடி தொடங்கப்பட்டுள்ளதாக டிகேஎம் சேர்மேன் சேகர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Toyota online Parts : http://www.toyotapartsconnect.in/

Toyota Kirloskar Motor launched First OEM online shop in India

Comments