டொயோட்டா எட்டியோஸ் எக்ஸ்குளூசிவ் எடிசன்

டொயோட்டா எட்டியோஸ் காரில் சிறப்பு எஸ்குளூசிவ் பத்திப்பினை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எட்டியோஸ் சிறப்பு பதிப்பில் புதிய வசதிகள் மற்றும் சில தோற்ற மாற்றங்களை பெற்றுள்ளது.

டொயோட்டா எட்டியோஸ்
டொயோட்டா எட்டியோஸ் 
டொயோட்டா எட்டியோஸ் காரின் டாப்  Vx வேரியண்டில் மட்டும் இந்த சிறப்பு பதிப்பு வந்துள்ளது. ஸ்மார்ட் லிங் தொடுதிரை அமைப்பு மற்றும் புதிய நீல வண்ணத்தில் வந்துள்ளது.
வெளிதோற்றத்தில் குரோம் பட்டைகள் , வீங் மிரர் மற்றும் சைட் வைசர்கள் இணைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்குளூசிவ் பேட்ஜ் மற்றும் புதிய நீலம் மெட்டாலிக் வண்ணம் போன்றவை மாறுதல்களாகும்.
எட்டியோஸ் உட்புறத்தில் டேஸ்போர்டில் மரத்தால் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் லிங் தொடுதிரை அமைப்பில் பூளூடூத் தொடர்பு , சைகை கட்டுப்பாடு , குரல் வழி கட்டுப்பாடு , மொபைல் மூலம் நேவிகேஷன் தொடர்பு போன்றவற்றை பெற்றுள்ளது. இரட்டை வண்ண ஃபேப்ரிக் இருக்கைகளை பெற்றுள்ளது.
டொயோட்டா எட்டியோஸ்
87பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 65பிஎச்பி ஆற்றலை தரவல்ல 1.4 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இரண்டிலும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
டொயோட்டா எட்டியோஸ் எக்ஸ்குளூசிவ் விலை (ex-showroom Delhi)
எட்டியோஸ் பெட்ரோல் – ரூ.7.82 லட்சம்
எட்டியோஸ் டீசல் – ரூ.8.93 லட்சம்
Toyota Etios exclusive edition launched with new smartlink Touchscreen infotainment system

Comments