டொயோட்டா எட்டியோஸ் லிவா சிறப்பு பதிப்பு அறிமுகம்

டொயோட்டா எட்டியோஸ் லிவா காரில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு பதிப்பினை டொயோட்டா விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. டொயோட்டா எட்டியோஸ் லிவா சிறப்பு பதிப்பு ஸ்போர்ட்டிவ் தோற்றத்துடன் விளங்குகின்றது.

டொயோட்டா எட்டியோஸ் லிவா

இரட்டை வண்ண பெயிண்டிங் செய்யப்பட்டுள்ள , மர வேலைப்பாடுகள் மிக்க டேஸ்போர்டு போன்ற சில கூடுதல் தோற்றம் மாற்றங்களை பெற்றுள்ள எட்டியோஸ் லிவோ காரில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை.

எஎட்டியோஸ் லிவா காரின் மேற்பகுதி , ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் , பில்லர்கள் மற்றும் பின்புறம் பார்க்கும் கண்ணாடி வரை கருப்பு நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. மேலும்  16 இஞ்ச் டைமன்ட் கட் ஆலாய் வீலை பெற்றுள்ளது.

டொயோட்டா எட்டியோஸ் லிவா
ads

உட்புறத்தில் மர வேலைப்பாடுகளை கொண்ட டேஸ்போர்டு , இரட்டை வண்ண ஃபேபரிக் இருக்கைகள் , பூளூடூத் ஆடியோ சிஸ்டம் , முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , பீரி டென்ஸ்னர் மற்றும் ஃபோர்ஸ் லிமிட்டர் முன்பக்க இருக்கை பட்டை போன்ற பாதுகாப்பு வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

79பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரொல் மற்றும் 67 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் டீசல் என்ஜினும் பொருத்தப்பட்டிருக்கும். இரண்டிலும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

டொயோட்டா எட்டியோஸ் லிவா சிறப்பு பதிப்பு விலை

எட்டியோஸ் லிவா சிறப்பு பதிப்பு – ரூ.5.76 லட்சம் (பெட்ரோல்)
எட்டியோஸ் லிவா சிறப்பு பதிப்பு – ரூ.6.79 லட்சம் (டீசல்)

( எக்ஸ்ஷோரூம் டெல்லி )

எட்டியோஸ் லிவா

Toyota Etios Liva Special Edition Launched

Comments