மோட்டார் வாகன துறையில் நாசாவின் 5 கண்டுபிடிப்புகள்..!

உலக மோட்டார் வாகன துறையில் பல்வேறு விதமான புதிய நுட்பங்கள் இடம்பெற்று வருகின்ற சூழ்நிலையில் அமெரிக்காவின் நாசா அமைப்பால் உருவாக்கப்பட்டு மோட்டார் வாகன துறையின் முக்கிய பயன்பாடாக மாறிப்போன 5 கண்டுபிடிப்புகளை இங்கே காணலாம்..!

மோட்டார் வாகனங்கள்

நாசா என அழைக்கப்படுகின்ற அமெரிக்காவின் தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பின் சார்பில் விண்வெளி சார்ந்த செயல்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட அமைப்புகள் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நாசாவினால் உருவாக்கப்பட்டு மோட்டார் தயாரிப்பு துறையில் பயன்படுகின்ற முக்கியமானவற்றை அறிந்து கொள்ளலாம்.

 

1. கார்பன் ஃபைபர்

இன்றைய நவீன கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் போன்றவற்றில் எடை குறைப்பு மற்றும் வலுவான கட்டமைப்பு போன்ற காரணங்களுக்கு பெரிதும் கார்பன் ஃபைபர் மோட்டார் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

கார்பன் ஃபைபர் கொண்டு உருவாக்கப்பட்ட லம்போர்கினி செஸ்டோ கார்

2. ஜிபிஎஸ்

எங்கேயும் யாருடைய வழிகாட்டுதல் துனையுமின்றி பயணிக்க மிக எளிமையாக அனைத்து தரப்பினராலும் பயன்படுத்தப்படுகின்ற ஜிபிஎஸ் எனும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) முதன்முறையாக நாசா குழுவினரால் ஸ்பேஸ் பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்டது.

3. ட்வீல்

காற்று இல்லாத ட்வீல் டயர்களை பிரான்ஸ் நாட்டின் மிச்செலின் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இந்த நுட்பத்தினை முதன்முறையாக நாசா விண்வெளி மையமே தனது விண்வெளி திட்டங்களுக்காக உருவாக்கியது.

4. தீத்தடுப்பு ஃபேப்ரிக் ரைடிங்கியர்ஸ்

தற்போது ஸ்போர்ட்ஸ் கார் டிரைவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ரைடர்கள் பயன்படுத்தும் உயர்ரக தீத்தடுப்பு ஃபேப்ரிக் ரைடிங் கியரை முதன்முறையாக நாசா தன்னுடைய அப்போலோ I பயிற்சி சமயத்தில் 3 வீரர்கள் தீப்பற்றியதால் இறந்தனர். இதனை தடுக்கவே நாசா Flame retardant fabric வகையான கியர்களை உருவாக்கியது.

5. ரோபோட்டிக் கைகள்

எந்திர கைகள் நேரடியாக கார்களில் இடம்பெறவில்லை என்றாலும் இன்றைய கார்கள் தயாரிப்பில் முக்கிய பங்கினை ரோபோட்டிக் ஆர்ம்ஸ் மேற்கொள்கின்றன. நாசா உருவாக்கிய இந்த நுட்பம் கார் உற்பத்தி லைன்களில் பல்வேறு வகைகளில் பயன்படுகின்றது.

Recommended For You