2017-ல் 57 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா இந்தியா

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், கடந்த 2017 ஆம் ஆண்டில்  மொத்தம் 57,94,893 இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

ஹோண்டா இந்தியா விற்பனை விபரம்

 

இந்தியா மோட்டார்சைக்கிள் சந்தையில் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வரும் ஸ்கூட்டர் சந்தையில் 50 சதவீதத்துக்கு கூடுதலான பங்களிப்பை பெற்ற நிறுவனமாக விளங்கும் ஹோண்டா ஆக்டிவா மாதந்தோறும் 2 லட்சத்துக்கும் கூடுதலான ஸ்கூட்டர்களை விற்பனை செய்து முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்நிறுவனம் ஹோண்டா க்ளிக், கிரேஸியா போன்ற ஸ்கூட்டர் மாடல்கள் மிக அமோகமான வரவேற்பினை பெற்று வரும் நிலையில், சிபி ஷைன், ஹார்னெட் 160 ஆர் ஆகிய இரு மாடல்களுபம் அமோகமான ஆதரவினை பெற்றுள்ளது.

முதன்முறையாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹோண்டா பைக் நிறுவனம், 50 லட்சத்துக்கு கூடுதலான மாடல்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

Recommended For You