அதிரடியை கிளப்பும் மாருதி டிசையர் கார் விற்பனை நிலவரம்

இந்திய சந்தையின் முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி கார் நிறுவனத்தின் மாருதி டிசையர் 5 மாதங்களில் 95,000 கார்கள் என்ற விற்பனை எண்ணிக்கையை எட்டியுள்ளது.

மாருதி டிசையர் கார்

தீபாவளி பண்டிகை மற்றும் தசரா ஆகிய பண்டிகைகளை ஒட்டி மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து மோட்டார் வாகன நிறுவனங்கள் எட்டி வருகின்றது.

கடந்த மே மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட்ட புதிய தலைமுறை டிசையர் கார் அமோக ஆதரவினை பெற்றுள்ள சூழ்நிலையில் மூன்று மாதங்கள் வரை காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் , செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டுமே 60,000 க்கு அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது.

1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் மாடலின் பவர் 82 ஹெச்பி வெளிப்படுத்துவதுடன் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

டிசையர் பெட்ரோல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 22 கிலோமீட்டர் வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.

ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 75 ஹெச்பி பவருடன் , 190 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

டிசையர் டீசல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 28.40 கிலோமீட்டர் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

Recommended For You