நிசான் எக்ஸ்-ட்ரெயில் எஸ்யூவி இந்தியா வருகை

  நிசான் நிறுனத்தின் எக்ஸ்-ட்ரெயில் எஸ்யூவி காரை மீண்டும் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர நிசான் திட்டமிட்டுள்ளது. புதிய நிசான் எக்ஸ் ட்ரெயில் வரும் பண்டிகை காலத்திற்க்கு முன்னதாக விற்பனைக்கு வரலாம்.நிசான் எக்ஸ் ட்ரெயில்

  கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் விற்பனையில் இருந்த நிசான் எக்ஸ்-ட்ரெயில் 2014ம் ஆண்டில் விற்பனை நிறுத்தப்பட்டது. தற்பொழுது வந்துள்ள புதிய 2013 நிசான் எக்ஸ்-ட்ரெயில் தான் இந்தியாவுக்கு வரவுள்ளது.

  7 இருக்கைகள் கொண்ட நிசான் எக்ஸ்-ட்ரெயில் எஸ்யூவி காரில் மிக சிறப்பான இன்டிரியர் மற்றும் பல நவீன வசதிகளுடன் கவர்ந்திழுக்கும் தோற்றத்தில் விளங்குகின்றது.

  2.0 லிட்டர் டிசிஐ என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் சிவிடி கியர்பாக்ஸ்
  இடம் பெற்றிருக்கலாம். மேலும் சாலையை ஸ்கேன் செய்து அதற்க்கேற்ப சஸ்பென்ஷன் அமைப்பினை தானாகவே மாற்றிக்கொண்டு பயணிகளுக்கு சிறப்பான பயண அனுபவத்தினை வழங்கும் ஏக்டிவ் ரைட் கன்ட்ரோல் உள்ளது.

  ads

  முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள நிசான் எக்ஸ்-ட்ரெயில் எஸ்யூவி காருக்கு போட்டியாக ஹூண்டாய் சான்டா ஃபீ , மற்றும் ஹோண்டா சிஆர்-வி போன்றவை விளங்கும். நிசான் எக்ஸ்-ட்ரெயில் விலை ரூ.32 முதல் 36 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.

  விற்பனை எண்ணிக்கையை அடிப்படையில் எதிர்காலத்தில் இந்தியாவிலே ஒருங்கினைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

  Comments