நிசான் GT-R இந்தியா வருகை உறுதியானது

உலக பிரபலங்களில் மிக விருப்பமான காட்ஸில்லா என்கிற நிசான் GT-R சூப்பர் கார் இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் வரவுள்ளது.  நிசான் GT-R முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு வரும்.

நிசான் GT-R

காட்ஸில்லா என்ற செல்ல பெயருடன் அழைக்கப்படும்  நிசான் GT-R காரில் மிகவும் சிறப்பான என்ஜின் மற்றும் சொகுசு தன்மைகளை கொண்ட காராக விளங்கும்.

நிசான் GT-R காரில் 547பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் மிகவும் சக்திவாய்ந்த 3.8 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 632என்எம் ஆகும்.

நிசான் ஜிடி ஆர் விலை ரூ. 2 கோடியாக இருக்கலாம்.

நிசான் எக்ஸ்-ட்ரெயில்

ads

நிசான் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவி காரும் விரைவில் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வருகின்றது. 2005ம் ஆண்டு முதல் விற்பனையில் இருந்த எக்ஸ் ட்ரெயில் கடந்த வருடத்தின் பிப்பரவரி மாதம் விற்பனை நிறுத்தப்பட்டது.

நிசான் எக்ஸ் ட்ரெயில்

தற்பொழுது வரவுள்ள புதிய தலைமுறை நிசான் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவி 2013ம் ஆண்டில் விற்பனைக்கு வந்தது. இதில் 7 இருக்கைகளை பெற்றிருக்கும்.

Nissan GT-R Confirmed to India Launch and also X-trail

Comments