பஜாஜ் டிஸ்கவர் விடை பெறுகின்றதா ?

பஜாஜ் டிஸ்கவர் மாடலை முற்றிலும் நீக்கும் முயற்சியில் பஜாஜ் ஆட்டோ களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டிஸ்கவர் பிராண்டுக்கு மாற்றாக புதிய பிராண்டினை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

bajaj-discover-100m

டிஸ்கவர் வரிசையில் 125S , 150S மற்றும் 150F போன்ற மாடல்கள் மட்டுமே விற்பனையில் உள்ளது. 125சிசி முதல் 150சிசி வரையிலான என்ஜின் பிரிவில் புதிய பிராண்டினை உருவாக்கவும் டிஸ்கவர் பிராண்டினை நீக்கவும் உள்ளது.

ads

புதிய பிராண்டில் முதல் பைக்காக 150சிசி பிரிவில்விற்பனைக்கு வரவுள்ளதாம். இது மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் தோற்ற அம்சங்களுடன் பல்சர் வரிசைக்கு இணையாகவும் அதே சமயம் மிக சிறப்பான மைலேஜ் தரவல்லதாகுவும் இருக்கலாம் என கருதப்படுகின்றது.

வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் பஜாஜ் ஆட்டோ பங்கேற்கவில்லை என்பதனால் அடுத்த ஆண்டின் மத்தியில் புதிய பிராண்டினை பஜாஜ் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. மேலும் தற்பொழுது விற்பனையில் உள்ள டிஸ்கவர் வரிசையை முற்றிலும் நீக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments