பஜாஜ் டோமினார் 400 பைக் விலை ரூ.1.38 லட்சம் மட்டுமே

இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முதன்முறையாக சக்திவாய்ந்த பஜாஜ் டோமினார் 400 க்ரூஸர் பைக் மாடலை ரூ.1.38 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.  டியூவல் சேனல் ஏபிஎஸ் டாப் டோமினார் 400 பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

 

ads

மிகவும் குறைந்த அறிமுக விலையில் அதிரடியாக பஜாஜ் ஆட்டோ வெளியிட்டுள்ள டொமினார் 400 பைக்கினை மாதம் 15,000 எண்ணிக்கையில் விற்பனை செய்ய பஜாஜ் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 80 டீலர்கள் வழியாக 22 நகரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. டொமினார் பைக்கின் முன்பதிவு ஆன்லைனில் செய்துகொள்ள ரூ.9000 கட்டணமாக பெற்று கொள்ளப்படுகின்றது. வருகின்ற ஜனவரி மாதம் முதல் டெலிவரி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டோமினார் 400 டிசைன் :

க்ரூஸர் ரக பைக் மாடலாக டொமினார் 400 அமைந்திருந்தாலும் அட்டகாசமான வடிவ தாத்பரியத்தை கொண்டு மிகவும் நேர்த்தியான முழு எல்இடி தானியங்கி ஹெட்லேம்பினை பெற்றுள்ளது. மிரட்டலான தோற்ற அம்சத்தை பெற்று கவர்ந்திழுக்கும் பல நவீன அம்சங்களை பெற்றுள்ளது. குறிப்பாக டிஜிட்டல் இன்ஸ்டுரூமென்ட் கிளஸ்ட்டர் , கைப்பிடி மற்றும் பெட்ரோல் டேங்க் மேல் டிஜிட்டல் டிஸ்பிளே அமைப்புகள் , இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் ஸ்பீடோமீட்டர் , டேக்கோமீட்டர் , எரிபொருள் அளவு , டிரிப் மீட்டர் மற்றும் ஓடோமீட்டர் போன்றவற்றை கொண்டுள்ளது.

டோமினார் 400 பைக் அளவுகள்:

 • நீளம்- 2156 மிமீ
 • அகலம் – 813 மிமீ
 • உயரம்- 1112 மிமீ
 • டயர் அளவு (முன்பக்கம்) – 110/70 R17 Radial
 • டயர் அளவு (பின்பக்கம்) – 150/60 R17 Radial
 • சஸ்பென்ஷன் – 43 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோக்குகள் (முன்புறம்), மல்டிஸ்டெப்மோனோஷாக் அப்சார்பர் (பின்புறம்)
 • பிரேக் – டிஸ்க் 320 mm (முன்), 230 mm (பின்)

டோமினார் 400 என்ஜின் விபரம்

பஜாஜ் டிரிபிள் ஸ்பார்க் நுட்பத்தினை கொண்டு 35 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 373சிசி டியூக் 390 பைக்கில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை பெற்றுள்ளது. இதன் டார்க் 35 நியூட்டன் மீட்டர் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் மற்றும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனும் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. 0  முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். டோமினார் 400 பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 148 கிலோமீட்டர் ஆகும்.

 • என்ஜின் – 373cc
 • பவர் – 34.5bhp at 8000rpm
 • டார்க்: 35Nm at 8500rpm
 • கியர்பாக்ஸ் – 6-speed Slipper Clutch
 • எடை – 182 kg
 • எரிபொருள் கலன் – 13-Litres

முன்பக்கத்தில் 43மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை பெற்று பின்பக்கத்தில் மல்டிஸ்டெப் மோனோஷாக் அப்சார்பரினை கொண்டுள்ளது. எம்ஆர்ஃஎப் சி1 டயர்களை பெற்றுள்ள டோமினார் 400 பைக்கின் முன்பக்க டயர் அளவு – 110/70 R17 Radial பின்பக்கம் டயர் அளவு  150/60 R17 Radial அளவினை பெற்றுள்ளது. முன்பக்க டயரில் 320 மிமீ சிங்கிள் டிஸ்க்பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்று டியூவல் சேனல் ஏபிஎஸ் மாடலை நிரந்தர அம்சமாக கொண்டுள்ளது.

பஜாஜ் டோமினார் 400 பைக் நீலம் ,வெள்ளை மற்றும் சிவப்பு போன்ற வண்ணங்களில் கிடைக்கும்.  டொமினார் 400 பைக்கின் போட்டியாளர்கள் மஹிந்திரா மோஜோ, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 , கேடிஎம் டியூக் 200 மற்றும் பெனெல்லி டிஎன்டி 25 போன்றவை ஆகும்.

முதற்கட்டமாக தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை மநகரங்களில் மட்டுமே கிடைக்கும். கீழே டோமினார் 400 பைக்கின் தமிழக எக்ஸ்ஷோரூம் விலை சேர்க்கப்பட்டுள்ளது.

டோமினார் 400 பைக் விலை

பஜாஜ் டோமினார் 400 பைக் விலை ரூ. 1.38,625 லட்சம் (ஏபிஎஸ் இல்லாத மாடல்)

பஜாஜ் டோமினார் 400 பைக் விலை ரூ. 1.52,875 லட்சம் ( ட்வீன் சேனல் ஏபிஎஸ் மாடல்)

(எக்ஸ்-ஷோரூம் சென்னை)

Comments