பழைய கார்களுக்கு 1.5 லட்சம் தர மத்திய அரசு முடிவு

10 வருடத்திற்க்கு மேற்பட்ட கார்களை முதற்கட்டமாக டெல்லி மாநகரில் அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளது. பழைய டீசல் கார்களை ஸ்கிராப் செய்தால் 1.5 லட்சம் வரை வரி சலுகையை பெற இயலும்.

கார் ஸ்கிராப்

மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது…

சுற்றுசூழலுக்கும் பாதிப்பினை தரும் 10 வருடத்திற்க்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய விரும்புபவர்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.150 லட்சம் வரை வரிச்சலுகை கிடைக்கம் வகையிலான திட்டத்தினை வகுத்து வருகின்றோம்.

சிறிய ரக கார்களை கொடுத்தால் அவர்கள் புதிய வாகனம் வாங்கும்பொழுது ரூ.30000 வரை வரி சலுகை பெற முடியம்.

ads

டிரக் , பஸ் போன்ற வர்த்தக வாகனங்களை ஒப்படைப்போருக்கு ரூ.1.50 லட்சம் வரை வரி சலுகை கிடைக்கும்.

நாட்டில் உள்ள முக்கிய ஸ்கிராப் செய்யும் மையமான கன்டலா துறைமுகம் போன்றே 10க்கு மேற்பட்ட இடங்களில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கட்காரி தெரிவித்தார்.

Scrap Old Cars To Get Up To Rs. 1.5 Lakhs tax Benefits

Comments