புதிய ஃபார்ச்சூனர் எஸ்யுவி வேரியண்ட் விபரம்

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி உலகின் பார்வைக்கு வரும் 17ந் தேதி தாய்லாந்தில் அறிமுகம் செய்ய உள்ளனர். புதிய ஃபார்ச்சூனர் எஸ்யுவி  வேரியண்ட் மற்றும் சிறப்பம்சங்கள் வெளிவந்துள்ளது.

 ஃபார்ச்சூனர் எஸ்யுவி

கம்பீரமான தோற்றம் சிறப்பான வடிவமைப்பு மற்றும் உட்புறத்தில் நவீன அம்சங்களுடன் கூடிய வசதிகள் மற்றும் சொகுசுதன்மையை புதிய ஃபார்ச்சூனர் எஸ்யுவி பெற்றுள்ளது.

லேண்ட் க்ரூஸர் மற்றும் லெக்சஸ் எஸ்யுவி கார்களின் டிசைன்களின் அடிப்படையில் வெளிதோற்றத்தினை பெற்றுள்ளது. எச்ஐடி முகப்பு விளக்குகளுடன் கூடிய பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் , பக்கவாட்டில் புதிய டைமன்ட் கட் 18 இஞ்ச் ஆலாய் வீல், சி பில்லர் அருகில் ஸ்டைலிங் டிவிக் செய்யப்பட்டுள்ளது.

 ஃபார்ச்சூனர் எஸ்யுவி

 ஃபார்ச்சூனர் எஸ்யுவி
ads

பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகள் குரோம் பட்டை , புதிய ரூஃப் ஸ்பாய்லர் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர்.

உட்புறத்தில் பிரிமியம் வசதிகளுடன் கூடிய தோற்றத்தினை ஃபாரச்சூனர் பெற்றுள்ளது. புதிய கருப்பு நிற இன்டிரியரில் சில்வர் நிற இன்ஷர்ட்கள் , தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, தானியங்கி ஏசி கட்டுப்பாடு போன்ற வசதிகள் உள்ளன.

 ஃபார்ச்சூனர் எஸ்யுவி

புதிய ஃபார்ச்சூனர் எஸ்யுவி முந்தைய மாடலை விட பாதுகாப்பு அம்சங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 7 காற்றுப்பைகளை , ஏபிஎஸ் , இபிடி , பிரேக் உதவி , வாகனம் நிலைப்பு தன்மை கட்டுப்பாடு , டிராக்‌ஷன் கட்டுப்பாடு , மலை ஏற மற்றும் இறங்க உதவி என பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

Smart-Key

Smart-Key

தற்பொழுது விற்பனையில் உள்ள 2.5 லிட்டருக்கு மாற்றாக 150எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4 லிட்டர் ஜிடி என்ஜின் மற்றும் சந்தையில் உள்ள 3.0 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக 177எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்ற நாடுகளில் உள்ளது. ஆனால் இந்தியாவிற்க்கு பெட்ரோல் என்ஜின் வரவாய்ப்புகள் குறைவு.

 ஃபார்ச்சூனர் எஸ்யுவி

 ஃபார்ச்சூனர் எஸ்யுவி வேரியண்ட் விபரம்

2.4G 4×2 6-speed MT

2.4V 4×2 6-speed AT

2.8V 4×2 6-speed AT

2.8V 4×4 6-speed AT

2.7V 4×2 6-speed AT

AT-Automatic MT- Manual

image source :allnewfortuner

Comments