புதிய ஃபோர்டு ஃபிகோ கார் விற்பனைக்கு வந்தது

ஃபோர்டு ஃபிகோ காரின் புதிய தலைமுறை மாடல் ரூ.4.29 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஃபோர்டு ஃபிகோ கார் ஃபிகோ ஆஸ்பயர் மாடலை அடிப்படையாக கொண்டுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ கார்
ஃபோர்டு ஃபிகோ கார்

ஃபிகோ ஆஸ்பயர் செடான் காரின் பெரும்பபாலான  அம்சங்களை   ஃபிகோ பெற்றுள்ளது. முந்தைய மாடல் ஃபிகோ கார் மிக சிறப்பான விற்பனை எண்ணிகையை பதிவு செய்துள்ளது.

ஃபோர்டு ஃபிகோ
ஃபோர்டு ஃபிகோ 

தோற்றம்

ஆஸ்பயர் காரின் தோற்றத்தில் மாற்றமில்லாமல் ஃபிகோ கார் அமைந்துள்ளது. முன்பக்கத்தில் ஆஸ்டன் மார்டின் கிரில் சாயலில் அமைந்துள்ள கிரில் நேரத்தியாக உள்ளது. முகப்பு விளக்குகள் மற்றும் வட்ட வடிவ பனி விளக்குகள் சிறப்பாக இருக்கின்றது.

ஃபோர்டு ஃபிகோ கார்
ads

பக்கவாட்டில் சிறப்பான வீல் ஆர்ச் , ஆலாய் வீல் , ஸ்டைலிங்கான கோடுகளை கொண்டுள்ளது. மேலும் பின்பக்கத்தில் சிறப்பான டெயில் விளக்கு , பின்புற பம்பரில் நெம்பர் பிளேட் போன்றவை பெற்றுள்ளது.

ஸ்போர்ட்டிவ் தோற்றத்தில் சிறப்பான் மற்றும் உறுதியான கட்டமைப்பினை கொண்ட காராக ஃபோர்டு ஃபிகோ விளங்குகின்றது.

இன்டிரியர்

ஆஸ்பயர் காரின் அதே டேஸ்போர்டு அமைப்பினை ஃபிகோ தக்கவைத்துள்ளது. கருப்பு மற்றும் பீஜ் நிறத்தில் உள்ள டேஸ்போர்டில் சில்வர் இன்ஷர்ட்களை பெற்றுள்ளது. சென்ட்ரல் கன்சோலில் சிறப்பாக அமைய பெற்றுள்ள சிங்க் 2.0 ஆடியோ டிஸ்பிளே , பவர் வீன்டோஸ்,  ஸ்டீயரிங் வீலில் ஆடியோ மற்றும் போன் கன்ட்ரோல் பொத்தான்கள் போன்றவற்றை பெற்றுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ கார்

என்ஜின்

ஃபிகோ காரில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மொத்தம் மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனை கொண்டுள்ளது. மெனுவல் மட்டுமல்லாமல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் உள்ளது.

87பிஎச்பி ஆற்றலை வெளிப்படுதும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 112என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ கார்

110பிஎச்பி ஆற்றலை வெளிப்படுதும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 136என்எம் ஆகும். இதில் 6 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

98.6பிஎச்பி ஆற்றலை வெளிப்படுதும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 215என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஃபிகோ பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 18.6 கிமீ மறும் ஆட்டோமேட்டிக் லிட்டருக்கு 17 கிமீ ஆகும். டீசல் ஃபிகோ மைலேஜ் லிட்டருக்கு 25.83கிமீ ஆகும்.

சிறப்புகள்

ஃபோர்டு ஃபிகோ காரில் உள்ள சில முக்கிய சிறப்பு வசதிகள் ஃபோர்டு மை டாக் , சிங் வித் ஆப் மைலிங்க் , 6 காற்றுப்பைகள் , ஆட்டிமேட்டிக் கியர்பாகஸ் , கருப்பு நிற ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி போன்றவை குறிப்பிடதக்கதாகும்.

பாதுகாப்பு வசதிகள்

ஃபிகோ காரின் டார் வேரியண்டில் 6  காற்றுப்பைகள் இடம்பெற்றுள்ளது. மற்ற வேரியண்ட்களில் 2 காற்றுபைகள் நிரந்தர அம்சமாக உள்ளது. மேலும் ஏபிஎஸ்  , இபிடி , இஎஸ்பி , ஹீல் அசிஸ்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ கார்

போட்டியாளர்கள்

ஃபிகோ காரின் போட்டியாளர்கள் ஸ்விஃப்ட் , போல்ட் , கிரான்ட் ஐ10 , பிரியோ போன்ற கார்கள் சவாலாக விளங்கும்.

ஃபோர்டு ஃபிகோ கார் விலை விபரம்

பெட்ரோல் மாடல் (ex-showroom, Delhi)
1.2P பேஸ் – ரூ. 4.29 லட்சம்

1.2P ஆம்பியன்ட் ; ரூ. 4.56 லட்சம்
1.2P டிரென்ட் ; ரூ. 5.00லட்சம்

1.2P டிரென்ட் + ; ரூ. 5.25 லட்சம்

1.2P டைட்டானியம் ;  ரூ.5.75 லட்சம்
1.2P டைட்டானியம் +  ; ரூ.6.40 லட்சம்
1.5P டைட்டானியம் ஆட்டோ – ரூ.6.91 லட்சம்
டீசல்  (ex-showroom, Delhi)
1.5 D பேஸ் – ரூ. 5.29 லட்சம்

1.5D ஆம்பியன்ட் – ரூ.5.62 லட்சம்
1.5D டிரென்ட் – ரூ.5.97 லட்சம்

1.5D டிரென்ட் + – ரூ.6.22 லட்சம்

1.5D டைட்டானியம் – ரூ. 6.72லட்சம்
1.5D டைட்டானியம் + – ரூ. 7.40லட்சம்

படம் பெரிதாக தெரிய படத்தின் மீது க்ளிக் பன்னுங்க….

Ford Figo Photo Gallery

ஃபோர்டு ஃபிகோ இன்டிரியர்

Ford Figo launched in India at priced Rs.

Comments