புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி வேரியண்ட் விபரம்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலின் வேரியண்ட் விபரம் சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. ஈகோஸ்போர்ட் எஸ்யூவி காரில் ஏபிஎஸ் மற்றும் இபிடி அனைத்து வேரியண்டிலும் இடம்பெற்றுள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி

2016 ஈக்கோஸ்போர்ட் காரின் தோற்றத்தில் எந்த பெரிதான மாற்றங்களும் இல்லை. 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆற்றல் மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈக்கோஸ்போர்ட் காரில் ஆம்பியன்ட் , டிரென்ட் , டிரென்ட் + ( புதிய வேரியண்ட்) , டைட்டானியம் , டைட்டானியம் (AT) மற்றும் டைட்டானியம் + ( புதிய வேரியண்ட்) போன்ற வேரியண்டில் வரவுள்ளது.

என்ஜின் வேரியண்ட் விபரம்

1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் – டிரென்ட் + , டைட்டானியம் +

ads

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் – ஆம்பியன்ட் , டிரென்ட் , டிரென்ட் + , டைட்டானியம் , டைட்டானியம் (AT) , டைட்டானியம் +

1.5 லிட்டர் டீசல் என்ஜின் – ஆம்பியன்ட் , டிரென்ட் , டிரென்ட் + , டைட்டானியம் ,  டைட்டானியம் +

ஈக்கோஸ்போர்ட் ஆம்பியன்ட்

 • எஃப்எம் /ஏஎம் ரேடியோ
 • யூஎஸ்பி , ஆக்ஸ் , பூளூடூத் தொடர்பு
 • முன்பக்க கதவுகளுக்கு பவர் வின்டோஸ்
 • 4 ஸ்பீக்கர் அமைப்பு
 • டில்ட் + டெலிஸ்கோபிக் ஸ்டீயரிங்
 • 12V பவர் சாகெட்  (New) 
 • பின்பக்க இருக்கைகளை முழுதாக மடக்க இயலும்  (New) 

ஈக்கோஸ்போர்ட் டிரென்ட்

ஆம்பின்ட் வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக

 • முன் மற்றும் பின் கதவுகளிலும் பவர் வின்டோஸ்
 • ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான்கள்
 • ரியர் வைப்பர்
 • 60;40 ஸ்பிளிட் இருக்கை
 • டேக்கோமீட்டர்  (New) 
 • ஏபிஎஸ் மற்றும் இபிடி (New) 
ஈக்கோஸ்போர்ட் டிரென்ட் +

டிரென்ட் வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக

 • இரட்டை முன்பக்க காற்றுப்பைகள்
 • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
 • புதிய இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர்
 • முன்பக்க பனி விளக்கு
 • குரோம் கிரில்
 • சில்வர் வண்ண ரூஃப் ரெயில்

ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம்

டிரென்ட் + வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக

 • 16 இஞ்ச் அலாய் வீல்
 • ரியர் பார்க்கிங் சென்சார்
 • கீலெஸ் என்ட்ரி 
 • ஸ்டார்ட் / ஸ்டாப் பொத்தான்

ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் AT

டைட்டானியம் + வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக
 • பக்கவாட்டு மற்றும் கர்டைன் காற்றுப்பைகள்
 • மலையேற உதவி
 • இபிஏ, இஎஸ்சி மற்றும் டிசிஎஸ்
ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் +

டிரென்ட் + வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக

 • லெதர் இருக்கை
 • ஆட்டோமேட்டிக் வைப்பர்
 • ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்கு
 • பகல்நேர ரன்னிங் விளக்குகள்
இன்னும் சில தினங்களில் விற்பனைக்கு வரவுள்ள  ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி  காரில் புதிய பிரவுன் வண்ணம் இணைக்கப்பட்டுள்ளது.
2016 Ford Ecosport SUV variants details revealed 

Comments