புதிய கவாஸாகி நின்ஜா 1000 அறிமுகம்

  புதிய கவாஸாகி நின்ஜா 1000 பைக்கில் சிலிப்பர் கிளட்ச் மற்றும் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக உள்ளது. கவாஸாகி நின்ஜா 1000 பைக்கில் புதிய வண்ணமும் இணைக்கப்பட்டுள்ளது.

  2016 கவாஸாகி நின்ஜா 1000
  சில குறிப்பிட்ட மாறுதல்களை மட்டுமே பெற்றுள்ள கவாஸாகி நின்ஜா 1000 பைக் இந்தியாவிற்க்கு அடுத்த வருடத்தின் மத்தியில் வரலாம். மேலும் விலையில் எந்த மாற்றங்களும் இருக்காது.
  140பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1043சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் முறுக்குவிசை 111என்எம் ஆகும் . இதில் 6 வேக கிர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  கவாஸாகி நின்ஜா 1000 பைக்கில் புதிய சிலிப்பர் கிளட்ச் மற்றும் ஏபிஎஸ் போன்றவை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. சிலிப்பர் கிளட்ச் முந்தைய மாடலை விட மிக சிறப்பாக எளிதாக அதாவது முன்பை விட 30% வரை இலகுவாக இருக்கும். 
  புதிதாக கேன்டி பிளாஸ்மா நீலம் வண்ணம் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற வண்ணங்கள் மெட்டாலிக் கிரீன் , பச்சை மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கும். இந்தியாவிற்க்கு கவாஸாகி நின்ஜா 1000 அடுத்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரலாம்.
  கவாஸாகி நின்ஜா 1000
  2016 Kawasaki Ninja 1000 details

  Comments