புதிய கேடிஎம் டியூக் 200 பைக் விற்பனைக்கு வந்தது

புதிய 2017 கேடிஎம் டியூக் 200 பைக் ரூ.1.43 லட்சம் விலையில் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ட்யூக் 200 பைக்கில் பல்வேறு தோற்ற மாற்றங்கள் மற்றும் வசதிகளை பெற்றதாக வந்துள்ளது.

 கேடிஎம் டியூக் 200

கேடிஎம் 390 ட்யூக் பைக் போன்று பெரிய அளவிலான வசதிகளை பெறாமலே வந்துள்ள புதிய  கேடிஎம் டியூக் 200 பைக்கில் ஹாலஜென் முகப்பு விளக்குடன் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகளை பெற்றுள்ளது. முந்தைய இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் வசதிகளில் மாற்றம் இல்லை.

ads

யூரோ 4 மாசு விதிமுறைகளுக்கு ஏற்ற 24bhp பவரை வெளிப்படுத்தும் 373சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 19.2 NM வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

முந்தைய மாடலில் இருந்த எந்த மாற்றங்களும் பெறாமலே விற்பனைக்கு வந்துள்ளது. முன்பக்க டயரில் 300மிமீ பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 230 மிமீ பிரேக் இடம்பெற்றுள்ளது.

2017 கேடிஎம் டியூக் 200 பைக் ரூ.1.43 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

 

Comments