புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் படங்கள் வெளியானது

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய  டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி வரும் ஜூலை 17ந் தேதி உலகின் பார்வைக்கு வரவுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி
டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி

முற்றிலும் மாறுபட்ட முகப்பு தோற்றத்தில் மிரட்டலான அமைப்பில் உள்ள ஃபார்ச்சூனர் எஸ்யுவி எல்இடி மற்றும் புராஜெக்டர் முகப்பு விளக்கினை பெற்றுள்ளது. பனி விளக்குகளுக்கு பெரிய அறை , 3 ஸ்லாட்களுக்கு மத்தியில் டொயோட்டா லோகோ பதிக்கப்பட்டுள்ளது.

ஃபார்ச்சூனர்  பக்கவாட்டில் புதிய ஆலாய் வீல் நேர்த்தியான வளைவுகள் கொண்டுள்ளது. பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு , பதிவென் பிளேட்டின் மேலே குரோம் பட்டையை கொண்டுள்ளது.

ஃபார்ச்சூனர் எஸ்யுவி
ads

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி

2016 Toyota Fortuner SUV

உட்புறத்தில் தொடுதிரை அமைப்பு , 4 ஸ்போக்குளை கொண்ட ஸ்டீயரிங் வீல் , ஸ்டீயர்ங் வீலில் கட்டுப்பாடு பொத்தான்களை பெற்றுள்ளது.

ஃபார்ச்சூனர்  எஸ்யுவி காரில் 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் டொயோட்டா ஜிடி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக தானியங்கி கியர்பாக்சில் கிடைக்கும். ஃபார்ச்சூனர் காரில் 7 காற்றுப்பைகள் இடம்பெற்றிருக்கும்

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி
டொயோட்டா ஃபார்ச்சூனர்

image source :  headlightmag  twitter , Top Gear Philippines 

2016 Toyota Fortuner images leaked

Comments