புதிய பொலிவுடன் இந்தியாவின் அடையாளம் அம்பி

இந்திய கார்களின் தனிப்பட்ட அடையாளமாக கருதப்படுகிற அம்பாசடர் புதிய பொலிவுடன் விரைவில் விற்பனைக்கு வருவதனை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் சிஇஒ உத்தம் போஸ் உறுதிசெய்துள்ளார்.

சில பத்தாண்டுகளுக்கு முன் இந்திய சாலைகளின் ஆக்கரிமித்திருந்த அம்பாசடர் பல வெளிநாட்டு நிறுவனங்களின் வருகை மற்றும் அவற்றின் வடிவமைப்பு போன்ற காரணங்களால் அம்பாசடர் சந்தையை வெகுவாக இழந்தது. ஆனாலும் இன்று தனியான அடையாளத்துடனே விளங்குவதனை மறுப்பதற்க்கில்லை..

அம்பாசடர் கார்

அம்பாசடர் என்ற பெயரில் இனைப்பாக பெயரை இனைத்து புதிய அம்பாசிடர் நாட்ச்பேக் காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. புதிய அம்பி இன்றைய நவீன கார்களுக்கு இனையான கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் விளங்கும். இதனால் இளைய வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவரமுடியும் என உத்தம் போஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் அம்பாசடர் கார்களுக்கு நைஜீரியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்தும் ஆர்டர்களை பெற்றுள்ளதால் அடுத்த மாதம் முதல் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ads

இந்தியாவின் அடையாளம் புதிய பொலிவுடன் வெளிவருவதனை காண காத்திருப்போம்…விரைவில்

Comments