புதிய மஹிந்திரா தார் எஸ்யுவி ஜூலை 22 முதல்

மேம்படுத்தப்பட்ட மஹிந்திரா தார் எஸ்யுவி கார் வரும் ஜூலை 22ந் தேதி விற்பனைக்கு வருகின்றது. புதிய மஹிந்திரா தார் எஸ்யுவி தோற்றம் மற்றும் உட்புறத்தில் மாற்றங்களை பெற்றிருக்கும்.

மஹிந்திரா தார் எஸ்யுவி

தார் எஸ்யுவி காரில் உள்ள 63எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் DI என்ஜின் மற்றும் 105எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.5 CRDe என்ஜினும் பொருத்தப்பட்டிருக்கும்.

தார் வெளிதோற்ற அமைப்பில் பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் பம்பர் . பெரிய ஃபூட் ரெஸ்ட் , ஃபென்டர் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் பக்கவாட்டிலும் சில மாற்றங்களை பெற்றுள்ளது.

உட்புறத்தில் இரட்டை வண்ணத்தினை பெற்றுள்ளது. பொலிரோ எம்யூவி காரின் ஸ்டீயரிங் வீல், ஹேண்ட்பிரேக் லிவர் , கியர் நாப் , எசி வென்ட்கள் பெறப்பட்டுள்ளது. பிரிமியம் தோற்றத்தினை தரும் வகையில் ஏசி வென்ட்டை சுற்றி சில்வர் பூச்சூ தந்துள்ளனர்.

ads

மேலும் இருக்கையின் அகலம் மற்றும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஜூலை 22ந் தேதி முறைப்படி விற்பனைக்கு வரவுள்ளது.

Mahindra Thar facelift

Comments