புதிய வால்வோ V40 மற்றும் XC40 டீஸர் வெளியீடு

பாதுகாப்பான கார்களை தயாரிப்பதில் முதன்மை வகிக்கும் ஸ்விடனை சேர்ந்த வால்வோ நிறுவனம் புதிய புதிய வால்வோ V40 மற்றும் வால்வோ  XC40  கார்களை வருகின்ற மே 18, 2016 அதிகார்வப்பூர்வமாக உலக அரங்கில் வெளிப்படுத்துகின்றது.

New-Volvo-V40-and-XC40-Teased

சீனாவின் ஜீலி  நிறுவனத்தின் கட்டுபாட்டில் இயங்கும் வால்வோ நிறுவனம் ஜீலி நிறுவனத்தின் CMA (Compact Modular Architecture)  தளத்தில் 40 வரிசை உருவாக்கப்பட்டுள்ளது.  வி40 ஹேட்ச்பேக் மற்றும் எக்ஸ்சி40 எஸ்யூவி என இரு கார்களும் தொடக்கநிலை சொகுசு சந்தையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

ads

ஸ்னாப்சாட் வழியாக வெளியாகியுள்ள டீஸர் படத்தில் உங்களின் தந்தையின் வால்வோ காரினை போல இருக்காது என்ற வாசகத்துடன் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த இரு கார் மாடல்களிலும் 3 சிலிண்டர் மற்றும் 4 சிலிண்டர் வால்வோ என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் எலக்ட்ரிக் என்ஜின் மற்றும் ஹைபிரிட் பிளக் இன் மாடலும் வரலாம். இளம் மற்றும் முதல் தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் நோக்கிலே இந்த மாடல்கள் வடிவைமைக்கப்படிருக்கும்.

New-Volvo-V40-and-XC40-soon

New-Volvo-V40-and-XC40-1

வெளியாகியுள்ள டீசர் படத்தில் வால்வோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்சி90 எஸ்யூவி காரில் இடம்பெற்றிருந்த தோர் சுத்தி வடிவிலான எல்இடி ரன்னிங் விளக்கினை வால்வோ வி40 மற்றும் எக்ஸ்சி40 டீசரிலும் வெளிப்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் விற்பனைக்கு வந்த அடுத்த சில மாதங்களிலே இந்தியாவிலும் புதிய வால்வோ V40 மற்றும் வால்வோ XC40 கார்கள் வரவுள்ளது.

volvo-v40-xc40-rear-1

 

volvo-v40-xc40-rear

volvo-v40

Comments