புதிய ஸ்கூட்டர்களை மற்றும் பைக்குகளை களமிறக்கும் ஹீரோ

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இரண்டு புதிய ஸ்கூட்டர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்பிளென்டர் புரோ மற்றும் ஹங்க் பைக்கும் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது.

ஹீரோ டேஷ்
ஹீரோ டேஷ்

ஹீரோ டேஷ் , ஹீரோ டேர் , ஹீரோ ஜீர் மற்றும் ஹீரோ லீப் ஹைபிரிட் போன்ற ஸ்கூட்டர்களை ஹீரோ மோட்டோகார்ப் தயாரித்து வருகின்றது. அவற்றில் முதற்கட்டமாக டேஸ் 110சிசி மற்றும் டேர் 125சிசி போன்றவை விற்பனைக்கு வரவுள்ளது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்

ஹீரோ டேஷ் ( மேஸ்ட்ரோ எட்ஜ் )110சிசி ஸ்கூட்டரில் தனது சொந்த தயாரிப்பில் முதல் ஹீரோ என்ஜினுடன் வரவுள்ள டேஷ் சிறப்பான தோற்றத்தில் விளங்கும். 8.5 பிஎச்பி ஆறலை தரவல்ல 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இன்னும் சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வரலாம்.

ஹீரோ டேர்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் 125சிசி ஸ்கூட்டராக ஹீரோ டேர் விளங்கும். இந்த ஸ்கூட்டரில் 9.1பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 125சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களுக்குள் ஹீரோ டேர் விற்பனைக்கு வரலாம்.
ஹீரோ டேர்
ஹீரோ டேர்

ஹீரோ ஸ்பிளென்டர் புரோ

மேம்படுத்தப்பட்ட புதிய ஸ்பிளென்டர் புரோ பைக்கில் புதிய பாடி கிராஃபிக்ஸ் மற்றும் என்ஜின் மேம்படுத்தப்பட்டிருக்கலாம். புதிய ஸ்பிளென்டர் புரோ இன்னும் சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வரலாம்.

ஹீரோ ஹங்க்

தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ள இந்த புதிய ஹீரோ ஹங்க் புதிய பாடி கிராஃபிக்ஸ் மற்றும் என்ஜின் 15பிஎச்பி தரும் வகையில் உயர்த்தப்பட்டிருக்கலாம் என தெரிகின்றது. எனவே புதிய ஹீரோ ஹங்க் மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும். இன்னும் சில மாதங்களில் வரலாம்.
ஹீரோ HX250R
ஹீரோ HX250R

ஹீரோ HX250R

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் இபிஆர் கூட்டணியில் உருவாக்கப்பட்டு வரும் இந்த பைக் இபிஆர் திவாலானதால் சற்று தள்ளி போயுள்ளது. அதனால் அடுத்த வருடத்தில் விற்பனைக்கு வரலாம்.
ஹீரோ டேர் , ஹீரோ டேஷ் மற்றும் புதிய ஸ்பிளென்டர் புரோ தீபாவளிக்கு முன்னதாகவும் ஹீரோ ஹங்க் இன்னும் மூன்று மாதங்களுக்குள் வரலாம்.
Hero upcoming Scooters and Motorcycle

Comments