புதிய ஹீரோ ஸ்பிளென்டர் புரோ சோதனை ஓட்டம்

  ஹீரோ ஸ்பிளென்டர் புரோ பைக்கின் புதிய மால் தற்பொழுது தீவர சோதனை ஓட்டத்தில் உள்ளது. புதிய ஹீரோ ஸ்பிளென்டர் புரோ முற்றிலும் மாறுபட்ட தோற்றம் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் என்ஜினுடன் வரவுள்ளது.

  ஹீரோ ஸ்பிளென்டர் புரோ

  வெறும் ஸ்டிக்கர் மாற்றம் இல்லாமல் கூடுதலாக பல மாற்றங்களை புதிய  ஹீரோ ஸ்பிளென்டர் புரோ பெற்றிருக்கும். புதிய ஸ்பிளென்டர் புரோ இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

  புதிய முகப்பு விளக்கு , முகப்பு விளக்கு கவுல் , புதிய மீட்டர் கன்சோல் , மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு புரஃபைல் மேம்பாடு என பல விதமான மாற்றங்களை பெற்றிருக்கும்.

  ஹீரோ ஸ்பிளென்டர் புரோ

  மேலும் ஹீரோ ஸ்பிளென்டர் புரோ பைக்கில் புதிய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள புதிய 100 அல்லது 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் மற்றும் எரிபொருள் சிக்கனம் மிக சிறப்பாக இருக்கும்.

  ads

  புதிய ஹீரோ ஸ்பிளென்டர் புரோ பைக்கின் விலையில் பெரிதான மாற்றங்கள் இருக்காது.

  ஹீரோ ஸ்பிளென்டர் புரோ

  ஹீரோ ஸ்பிளென்டர் புரோ
  imagesource :gaadiwaadi.com

  All New Hero Splendor Pro spotted for the first time

  Comments