பூஜ்யம் நட்சத்திர மதிப்பீட்டினை பெற்ற இந்திய கார்கள் – குளோபல் என்சிஏபி

இந்தியாவில் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் க்விட் , இயான் , ஈக்கோ , செலிரியோ மற்றும் ஸ்கார்ப்பியோ என 5 கார்களின் பேஸ் வேரியண்ட்களும் பூஜ்ய நட்சத்திரத்தை பெற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ncap-kwid

மூன்றாவது முறையாக இந்திய கார்களை சோதனை செய்துள்ள சர்வதேச கிராஷ் டெஸ்ட் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள 5 கார்கள் முந்தைய முறை சோதனை செய்யப்பட்ட எந்த கார்களும் வெற்றி பெறவில்லை எட்டியோஸ் மற்றும் போலோ மாடல்களை தவிர்த்து மற்றவை எல்லாம் 0 நட்சத்திரத்தை பெற்றுள்ளது.

ads

ஸ்விஃப்ட் , ஆல்ட்டோ 800 , நானோ , ஐ10 , ஃபிகோ , போலோ , எட்டியோஸ் , டட்ஸன் கோ ,  க்விட் , இயான் , ஈக்கோ , செலிரியோ மற்றும் ஸ்கார்ப்பியோ என சோதனை செய்யப்பட்ட அனைத்து கார்களின் பேஸ் வேரியண்ட்களும் பூஜ்யம் நட்சத்திரத்தினை (எட்டியோஸ் தவிர்த்து) பெற்றுள்ளது. இவற்றில் எட்டியோஸ் மற்றும் போலோ கார்களின் காற்றுப்பை மாடல்கள் 4 நட்சத்திர மதிப்பீட்டினை பெற்றது.

பரிதாபாத் IRTE யில் இன்று நடந்த இந்திய ஆட்டோமொபைல் பாதுகாப்பு கூட்டத்தில் குளோபல் என்சிஏபி பொது செயலாளர் டேவிட் வார்ட் இந்த மதிப்பீட்டு பட்டியலை வெளியிட்டார். அவர் கூறுகையில் பாதுகாப்பான இந்திய கார்கள் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் பாடி ஷெல் , காற்றுப்பை இல்லாத குறை போன்றொற்றை மேம்படுத்தினாலே காரின் பாதுகாப்பினை உறுதிசெய்ய முடியும் என தெரிவித்துள்ளார்..

அனைத்து கார்களும் மணிக்கு 64 கிமீ வேகத்தில் கிராஷ் டெஸ்ட் சோதனை செய்யப்பட்டுள்ளது. மனிதர்கள் போல உருவம் கொண்ட டம்மிகள் வைத்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

1. ரெனோ க்விட் கார் கிராஷ் டெஸ்ட்

தற்பொழுது குளோபல் என்சிஏபி அமைப்பினால் சோதனை செய்யப்பட்ட ரெனோ க்விட் 4 முறை சோதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் காற்றுப்பை இல்லாத மாடல் மற்றும் காற்றுப்பை உள்ள மாடல் என இரண்டும் சோதனை செய்யப்பட்டதில் இரு மாடல்களுமே பெரியவர்கள் பாதுகாப்பில் ஜீரோ நட்சத்திர மதிப்பீடு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் 2 நட்சத்திர மதிப்பினை பெற்றுள்ளது.

இதுபற்றி குளோபல் என்சிஏபி தெரிவிக்கையில் ரெனோ நிறுவனம் ஐரோப்பா சந்தையில் விற்பனை செய்யும் கார்களில் மிக சிறப்பான ரேட்டிங்கினை பெற்று வருகின்றது. க்விட் காரிலும் இதே தர அமைப்பினை பயன்படுத்த வேண்டும் என வேஃடுகோள் விடுத்துள்ளது.

renault-kwid-crash-test-report
2. ஹூண்டாய் இயான் கார் கிராஷ் டெஸ்ட்

க்விட் மற்றும் ஆல்ட்டோ கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ள ஹூண்டாய் இயான் காரின் காற்றுப்பை இல்லாத மாடல் ஜீரோ நட்சத்திர மதிப்பிட்டினை இரண்டு நட்சத்திர மிதிப்பீட்டினை குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றுள்ளது. ஆனால் காற்றுப்பை இல்லாத காரணத்தால் குறைவான மதிப்பீட்டினை பெற்றுள்ளது.

 

hyundai-eon-crash-test-report

3. மாருதி செலிரியோ கார் கிராஷ் டெஸ்ட்

பிரசத்தி பெற்ற மாருதி சுசூகி செலிரியோ கார் ஜீரோ நட்சத்திர மதிப்பீட்டினை பெரியவர்கள் பாதுகாப்பிலும் ஒரு நட்சத்திர மதிப்பீட்டினை சிறுவர்கள் பாதுகாப்பில் பெற்று அதிர்ச்சி அடையவைத்துள்ளது. குறைவான பாதுகாப்பினை குழந்தைகளுக்கு தருகின்றது.

maruti-celerio--crash-test-report

 

4. மாருதி ஈக்கோ கார் கிராஷ் டெஸ்ட்

மாருதி சுசூகி ஈக்கோ கார் ஜீரோ நட்சத்திர மதிப்பீட்டினை பெரியவர்கள் பாதுகாப்பிலும் ஒரு நட்சத்திர மதிப்பீட்டினை சிறுவர்கள் பாதுகாப்பில் பெற்று அதிர்ச்சி அடையவைத்துள்ளது. குறைவான பாதுகாப்பினை குழந்தைகளுக்கு தருகின்றது. காற்றுப்பைகள் ஆப்ஷனலாக இல்லை என்பது வருத்தமளிப்பதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

maruti-eeco-crash-test-report

5. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார் கிராஷ் டெஸ்ட்

மிக வலிமை கட்டுமானத்தை கொண்ட மாடலாக கருதப்பட்ட மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி கார் சர்வதேச கிராஷ் டெஸ்ட் சோதனையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜீரோ நட்சத்திர மதிப்பீட்டினை பெரியவர்கள் பாதுகாப்பிலும் இரண்டு நட்சத்திர மதிப்பீட்டினை சிறுவர்கள் பாதுகாப்பில் பெற்று அதிர்ச்சி அடையவைத்துள்ளது. காற்றுப்பை இல்லாத காரணமே இந்த குறைவான பாதுகாப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

mahindra-scorpio-crash-test-report

படங்கள் மற்றும் வீடியோ என அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது..நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்…

 

Comments