பெனெல்லி 750சிசி சூப்பர் பைக் படம் வெளியானது

பிரபலமான இத்தாலியின் சூப்பர் பைக் தயாரிப்பாளரான பெனெல்லி நிறுவனத்தின் பெனெல்லி 750சிசி சூப்பர் பைக் படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. BJ750GS என்ற குறியீட்டு பெயரில் தயாரிக்கப்பட்டு வரும் ஸ்டீரிட்ஃபைட்டர் வகை பைக் மாடலாகும்.

benelli-750cc-streetfighter-bike

TNT 899 மற்றும் TNT R போன்ற பைக் மாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள 3 சிலிண்டர் கொண்ட 750சிசி என்ஜினே  BJ750GS பைக்கிலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இதில் 6 வேக கியர்பாக்சினை பெற்றிருக்கும். இதில் ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தரமாக இருக்கும். தோற்ற அமைப்பில் TNT 899 மற்றும் TNT R பைக்குளின் தாக்கம் இருந்தாலும் மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களுடன் நேர்த்தியான மாடலாக விளங்கும்.

ads

BJ750GS 750சிசி சூப்பர் பைக் ட்ரையம்ப் ஸ்டீரிட் டிரிப்ள் மற்றும் கவாஸாகி Z800 போன்ற பைக் மாடலுக்கு நேரடியான போட்டியினை ஏற்படுத்தவல்லதாக விளங்கும். மேலும் BJ750GS பைக் மாடல் குறைவான விலையில் தரமான மாடலாக இருக்கும் நோக்கில் தயாரிக்கப்பட உள்ளது.

இந்திய சந்தையில் டிஎஸ்கே நிறுவனத்துடன் இணைந்து பெனெல்லி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மிக குறைந்த காலத்தில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்ற பிராண்டாக இந்திய சந்தையில் பெனெல்லி சூப்பர் பைக்குகள் வலம் வருகின்றது.

Comments