மஹிந்திரா நுவோஸ்போர்ட் ஏப்ரல் 4 முதல்

வரும் ஏப்ரல் 4 ந் தேதி மஹிந்திரா நுவோஸ்போர்ட் எஸ்யூவி கார் விற்பனைக்கு வரவுள்ளது. இந்திய சந்தையின் முதல் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக வந்த மஹிந்திரா குவான்டோ காரின் மேம்படுத்தப்பட்ட மாடலே மஹிந்திரா நுவோஸ்போர்ட் எஸ்யூவி ஆகும்.

mahindra-nuvosport

முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள வெளிதோற்ற படங்கள் மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் தோற்றத்தினை வெளிப்படுத்தும் வகையில் மிக நேர்த்தியான முகப்பினை பெற்றுளது. புதுப்பிக்கப்பட்ட புதிய பம்பர்  , முகப்பு விளக்குள் , நேர்த்தியான பனி விளக்குகளை பெற்றுள்ளது.

ads

பக்கவாட்டில் முந்தைய குவான்டோ காரின் தோற்றத்தினை பெற்றுள்ளது. பின்பக்கத்திலும் முந்தைய மாடலின் சாயலை தழுவியே சில மாற்றங்களை கொண்டுள்ளது.

உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய பீஜ் வண்ண டேஸ்போர்டு , ஆடியோ சிஸ்டம் , 7 இருக்கைகள் போன்றவற்றை பெற்றிருக்கும். மேலும் முன்பக்க இருகாற்றுப்பைகள்  ஏபிஎஸ் , இபிடி போன்றவை அனைத்து வேரியண்டிலும் ஆப்ஷனலாக கிடைக்க பெறலாம்.

டியூவி300 காரில் பொருத்தப்பட்டுள்ள  மேம்படுத்தப்பட்ட 84 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2 கட்ட டர்போசார்ஜரை கொண்ட புதிய எம் ஹாக்80  1.5 லிட்டர் டீசல் என்ஜின் பெற்றிருக்கும். இதன் முறுக்குவிசை 230Nm ஆகும். 5 வேக மெனுவல் தவிர ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கும்.

mahindra-nuvosport-rear-view

தன்னுடைய டியூவி300 மாடலுடன் போட்டியிடும் வகையில் மற்ற போட்டியாளர்களான விட்டாரா பிரெஸ்ஸா , ஈக்கோஸ்போர்ட் போன்றவற்றுடனும் மஹிந்திரா நுவோஸ்போர்ட் சந்தையை பகிர்ந்துகொள்ளும்.

 

 

Comments