மஹிந்திரா மோஜோ பைக் முழுவிபரம்

மஹிந்திரா மோஜோ பைக்கின் முழுவிபரங்களை மஹிந்திரா வெளியிட்டுள்ளது. மஹிந்திரா மோஜோ பைக் 5 வருட கால சோதனைகளுக்கு பின் சந்தைக்கு வருகின்றது.

மஹிந்திரா மோஜோ பைக்
மஹிந்திரா மோஜோ பைக்

வரும் அக்டோபர் 16ந் தேதி எதிர்பார்க்கப்படும் மஹிந்திரா மோஜோ பைக்கில் 300சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் 21 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் கலனை பெற்றுள்ளது.

27பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4 ஸ்ட்ரோக் ஒற்றை சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 30என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா மோஜோ பைக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 165கிமீ ஆகும். இதன் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 32கிமீ கிடைக்கலாம்.

மோஜோ பைக்கின் முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக்கும் , பின்பக்கத்தில் 240மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தியுள்ளனர். தற்பொழுது ஏபிஎஸ் ஆப்ஷனாலாக இல்லை . ஆனால் வரும்காலத்தில் ஏபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

மஹிந்திரா மோஜோ பைக்
ads

மஹிந்திரா மோஜோ பைக்

இரட்டை பிரிவு முகப்பு விளக்குடன் , கண் இமை போன்ற எல்இடி விளக்குகளை பெற்று சிறப்பான முகப்புடன் விளங்குகின்றது. பைரேலி டிபோலோ ரோஸா II டயர்கள் மிக சிறப்பான கிரிபினை தரவல்லதாகும்.

மஹிந்திரா மோஜோ பைக் விலை ரூ.2லட்சத்திற்க்குள் இருக்கலாம் வரும் அக்டோபர் 16ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.

மஹிந்திரா மோஜோ பைக்

மஹிந்திரா மோஜோ பைக்
Mahindra Mojo bike details specs

Comments