மஹிந்திரா மோஜோ பைக் விற்பனைக்கு வந்தது

மஹிந்திரா மோஜோ டூரர் பைக் ரூ.1.58 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மோஜோ பைக் சவாலான விலையில் வந்துள்ளதால் சந்தையை எளிதாக வெற்றி பெறலாம்.

மஹிந்திரா மோஜோ

கடந்த 2010ம் ஆண்டு பார்வைக்கு வந்த மஹிந்திரா மோஜோ பைக் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக டெல்லி , மும்பை , பெங்களூரு மற்றும் புனே நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

இரட்டை பிரிவு முகப்பு விளக்குடன் , கண் இமை போன்ற எல்இடி விளக்குகளை பெற்று சிறப்பான முகப்புடன் விளங்குகின்றது. பைரேலி டிபோலோ ரோஸா II டயர்கள் மிக சிறப்பான கிரிபினை தரவல்லதாகும்.

மஹிந்திரா மோஜோ பைக்

இரட்டை புகைப்போக்கிகளை கொண்டுள்ள சிறப்பான இருக்கை அமைப்பினை பெற்றுள்ள யூஎஸ்டி ஃபோர்க்குகளை கொண்டுள்ளது. வெள்ளை , கருப்பு மற்றும் சிவப்பு என மூன்று விதமான வண்ணங்களில் வந்துள்ளது.

ads

27பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4 ஸ்ட்ரோக் ஒற்றை சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 30என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா மோஜோ பைக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 165கிமீ ஆகும். இதன் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 32கிமீ கிடைக்கலாம்.

 மோஜோ பைக்கின் முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக்கும் , பின்பக்கத்தில் 240மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தியுள்ளனர். ஏபிஎஸ் பிரேக் இல்லை.

மோஜோ பைக் colour

சென்னை , கோல்கத்தா , ஹைத்திராபாத் போன்ற நகரங்களில் மோஜோ பைக் அடுத்த வருடம் விற்பனைக்கு வரவுள்ளது. கேடிஎம் டியூக் 200 , ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500 மற்றும் பெனெல்லி டிஎன்டி 25 போன்ற பைக்குகளுக்கு சவாலாக மஹிந்திரா மோஜோ விளங்கும்.

மஹிந்திரா மோஜோ பைக்

மஹிந்திரா மோஜோ பைக் விலை ரூ.1.58 லட்சம் ( எக்ஸ்ஷோரூம் டெல்லி )

மஹிந்திரா மோஜோ

மஹிந்திரா மோஜோ

மஹிந்திரா மோஜோ

மஹிந்திரா மோஜோ

Mahindra Mojo bike launched in India

Comments