மஹிந்திரா வெரிட்டோ எலக்ட்ரிக் கார் விரைவில் – ஆட்டோ எக்ஸ்போ 2016

2016 ஆட்டோ எக்ஸ்போவில்  மஹிந்திரா வெரிட்டோ எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.  வெரிட்டோ EV காரில் 80 கிமீ வரை சிங்கிள் சார்ஜில் பயணிக்க இயலும்.

Mahindra Verito electric

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012 மற்றும் 2014யில் காட்சிப்படுத்தப்பட்ட வெரிட்டோ மற்றும் மேக்ஸிமோ மினி டிரக் என இரண்டும் பிப்ரவரி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் வரவுள்ளது.  தற்பொழுது ஆக்ரா பகுதியில் மட்டும் வெரிட்டோ ஈவி  மற்றும் மேக்ஸிமோ ஈவி பயன்படாட்டில் உள்ளது.

ads

தலைநகர் தில்லியில் 2000சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட சிசி டீசல் என்ஜின் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மஹிந்திரா நிறுவனம் பாதிகபட்டதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தனது மஹிந்திரா ரேவா உதவியுடன் வெரிட்டோ காரில் பேட்டரி முலம் இயங்கும் வெரிட்டோ மாடலை விற்பனைக்கு கொண்டு வருகின்றது. வெரிட்டோ ஈவி மாடலை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 80 கிமீ வரை பயணிக்க இயலும்.  இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 80கிமீ ஆக இருக்கும். டாக்ஸி சந்தைக்கு ஏற்ற மாடலாக நிலை நிறுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது

 

Comments