மஹிந்திரா XUV ஏரோ கூபே எஸ்யூவி – ஆட்டோ எக்ஸ்போ 2016

வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016யில் மஹிந்திரா XUV ஏரோ கூபே எஸ்யூவி மாடல் படத்தினை டீசர் செய்துள்ளது. எக்ஸ்யூவி500 காரை அடிப்படையாக கொண்ட XUV ஏரோ கூபே கான்செப்ட் மாடல் காட்சிக்கு வரவுள்ளது.

Mahindra-XUV-Aero-concept-design

இந்திய சந்தையில் உயர்ரக சொகுசு கார்களில் மட்டுமே கூபே ர க எஸ்யூவி மாடல்கள் விற்பனையில் உள்ள நிலை மஹிந்திரா டீஸர் வெளியிட்டுள்ள எக்ஸ்யூவி ஏரோ மாடல் மிக சிறப்பான ஸ்டைலிங் தாத்பரியங்களுடன் மிக சிறப்பான கூபே மாடலாக விளங்கும்.

ads

எதிர்கால தொழில்நுட்பங்களை பெற்ற நவீனரக மாடலாக விளங்க உள்ள இந்த கான்செப்ட் மாடல் பக்கவாட்டு மற்றும் பின்புறத்தில் சிறப்பான ஸ்டைலிங் கோடுகளுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்படலாம். இந்த டிசைன் இந்திய வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டதாம்

என்ஜின் மற்றும் உற்பத்தி நிலை குறிந்து எவ்விதமான தகவலும் வெளியிடப்படவில்லை . இவை வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வரலாம். மஹிந்திரா இதுதவிர சாங்யாங் டிவோலி காரை விற்பனைக்கு கொண்டு வரலாம். மேலும் கேயூவி100 , டியூவி300 போன்ற புதிய மாடல்களுடன் மாற்றியமைக்கப்பட்ட மாடல்களை காட்சிப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது.

Comments