மாருதி எஸ் க்ராஸ் விலை குறைப்பு

மாருதி சுசூகி எஸ் க்ராஸ் க்ராஸ்ஓவர் மாடலாக விற்பனைக்கு நெக்ஸா டீலர் வழியாக வந்த எஸ் க்ராஸ் காரின் DDiS320 வேரியண்ட்கள் விலை ரூ.2.08 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. DDiS200 வேரியண்ட்கள் ரூ.40,666 முதல் ரூ.82,612 வரை குறைக்கப்பட்டுள்ளது.

maruti s cross suv

எஸ்-க்ராஸ் காரில் 90PS ஆற்றலை வழங்கும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 200Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. 120PS ஆற்றல் மற்றும் 320Nm டார்க் வழங்கும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது.

ads

பிரிமியம் கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி மாருதி சுசூகி நிறுவனம் நெக்ஸா என்ற பெயரில் புதிய  ஷோரூம்களை நாடுமுழுதும் திறந்துள்ளது. இதன் வாயிலாக விற்பனைக்கு வந்த முதல் மாடலான எஸ் க்ராஸ் பெரிய எண்ணிக்கையை பதிவு செய்யாமல் தோல்வியை தழுவியுள்ளது. எஸ் கிராஸ் காரினை தொடர்ந்து பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரூ.5.50 லட்சம் வரை சலுகை வழங்கி நிலையில் தற்பொழுது அதிரடியாக ரூ.2.08 லட்சம் வரை குறைத்துள்ளது. அதிகப்படியாக உள்ள ஸ்டாக் கார்களை குறைக்கும் நோக்கில் இந்த முடிவினை எடுத்துள்ளது. ஃபோர்டு இக்கோஸ்போர்ட் , க்ரெட்டா மற்றும் டஸ்ட்டர் போன்ற எஸ்யூவி மாடல்களுக்கு  போட்டியாக  அமைந்த எஸ் கிராஸ் பெரிதான வெற்றி பெற தவறியுள்ளது.

s-cross-chennai-ex-showroom-price

அனைத்தும் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

தொடர்புடையவை ; மாருதி சுசூகி கார் விலை உயர்ந்தது

Comments