மாருதி சுசூகி பலேனோ அறிமுகம் : பிராங்பேர்ட் மோட்டார் ஷோ

மாருதி சுசூகி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் கார் வரும் பிராங்பேர்ட் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வரவுள்ள நிலையில் சுசூகி பலேனோ காரின் அதிகார்வப்பூர்வ படங்களை அறிமுகம் செய்துள்ளது.

மாருதி சுசூகி பலேனோ
மாருதி சுசூகி பலேனோ 

வரும் 15ந் தேதி தொடங்க உள்ள 66வது பிராங்பேர்ட் ஆட்டோ ஷோவில் 60க்கு மேற்பட்ட வாகனங்கள் உற்பத்தி மாடலாக மற்றும் கான்செப்ட் நிலையிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சுசூகி நிறுவனத்தின் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் பெலேனோ கார் தற்பொழுது விற்பனையில் உள்ள ஸ்விஃப்ட் மாடலுக்கு மேலாக நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த மாடலில் பல நவீன வசதிகள் மற்றும் சிறப்பான வசதிகள் இருக்கும்.

மாருதி சுசூகி பலேனோ
ads

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் ஷோவில் ஐகே-2 கான்செப்டில் பார்வைக்கு வந்த பலேனோ தற்பொழுது உற்பத்தி நிலை மாடலாக காட்சிக்கு வரவுள்ளது. இதில் சுசூகியின் புதிய 1.0 லிட்டர் டர்போ பூஸ்டர்ஜெட் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜினும் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 2016 ஆட்டோ எக்ஸ்போ கன்காட்சியில் விற்பனைக்கு வரலாம் என தெரிகின்றது. இந்தியாவிலும் பலேனோ பெயர் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

மாருதி சுசூகி பலேனோ 

Maruti Suzuki Baleno unveiled Frankfurt Auto Show 2015

Comments