மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனைக்கு வந்தது

மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி மிக சவுகரியமான விலையில் ரூ.6.99 லட்சத்தில் தொடக்க விலை அமைந்துள்ளது. இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் காம்பேக்ட் ரக எஸ்யுவி காராக பிரெஸ்ஸா விளங்குகின்றது.

 

ads

டியூவி300 , ஈக்கோஸ்போர்ட் போன்ற கார்களுடன் நேரடியான போட்டியை சந்திக்கும் விட்டாரா பிரெஸ்ஸா கார் 2017ஆம் ஆண்டில் வரவுள்ள இந்திய பாதுகாப்பு தர கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு ஈடுகொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல மாருதியின் ஆஸ்தான இன்ஜின் 1.3 லிட்டர் மல்டிஜெட் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 89 bhp மற்றும் இழுவைதிறன் 200 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மைலேஜ் லிட்டருக்கு 24.3 கிமீ ஆகும்.

மேலும் படிக்க ; விட்டாரா பிரெஸ்ஸா மைலேஜ் விபரம்

LDi , LDi (O) , VDi , VDi (O) , ZDi மற்றும் ZDi + என மொத்தம் 6 விதமான வேரியண்டில் வந்துள்ள பிரெஸ்ஸா எஸ்யூவி காரில் டாப் வேரியண்டில் மாருதி ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் ஆப்பிள் கார்பிளே , ஆண்ட்ராய்டு தொடர்புகளை பெற இயலும். இரட்டை வண்ண கலவை , ரிவர்ஸ் கேமரா தானியங்கி முகப்பு விளக்கு , ஏபிஎஸ் இபிடி , முன்பக்க இரட்டை காற்றுப்பை போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.

 

பேஸ் வேரியண்டில் ஆப்ஷனலாக இரண்டு காற்றுப்பைகள் , ஏபிஎஸ் இபிடி போன்றவை இடம்பெற்றுள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விலை பட்டியல்

LDi – ரூ.6.99 லட்சம்

LDi (O) – ரூ. 7.12 லட்சம்

VDi  – ரூ. 7.62 லட்சம்

VDi (O) – ரூ.7.75 லட்சம்

ZDi – ரூ.8.55 லட்சம்

ZDi + – ரூ. 9.68 லட்சம்

( அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் படங்கள்

 

Comments