மாருதி பெலினோ காத்திருப்பு காலம் 6 மாதம்

நெக்ஸா வழியாக விற்பனைக்கு வந்த மாருதி பெலினோ பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் காத்திருப்பு காலம் 6 மாதங்கள் வரை உயர்ந்துள்ளது.  மாருதி பெலினோ கார் இதுவரை 70,000 முன்பதிவுகளை கடந்துள்ளது.

மாருதி பெலினோ
மாருதி பெலினோ

கடந்த டிசம்பர் 2015 மாத விற்பனையில் பிரிமியம் சந்தையில் முன்னனி வகிக்கும் எலைட் I20 காரை பின்னுக்கு தள்ளி பெலினோ காரின் விற்பனை அதிகரித்துள்ளது.

பெலினோ – 11,203

ads

எலைட் ஐ20 – 10,379

கடந்த சில மாதங்கள் வரை ஒட்டுமொத்த பிரிமியம் ஹேட்ச்பேக் சந்தையில் 50 % பங்களிப்பினை கொண்டிருந்த எலைட் i20 கார் கடந்த அக்டோபர் முதல் பெலினோ காரின் வரவால் கடுமையான சவாலினை எதிர்கொண்டடு வருகின்றது.

பெலினோ கார் இந்தியா மட்டுமல்லாமல் 100க்கு மேற்பட்ட வெளிநாடுகளுக்கு இந்தியாவினை ஏற்றுமதி மையமாக கொண்டு செயல்பட உள்ளதால் ஜப்பான் , ஐரோப்பா , தென் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்த மாதம் முதல் ஏற்றுமதி செய்யப்பட உள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் 75PS ஆற்றல் மற்றும்  190Nm டார்க் தரும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் 85PS ஆற்றல் மற்றும்  115Nm டார்க் தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

தொடர்புடையவை ; பெலினோ கார் முழுவிபரம்

தற்பொழுது மாருதி பெலினோ காரின் காத்திருப்பு காலம் 6 மாதங்கள் வரை அதிகரித்துள்ளதால் உற்பத்தியை அதிகரிக்க மாருதி திட்டமிட்டு வருகின்றது.

Comments