மாருதி வேகன் ஆர் அவான்ஸ் சிறப்பு பதிப்பு

மாருதி வேகன்ஆர் காரின் அவான்ஸ் சிறப்பு பண்டிகை கால பதிப்பினை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  வேகன் ஆர் அவான்ஸ் இரண்டு வேரியண்டிகளில் மூன்று மாதங்களுக்கு கிடைக்கும்.

மாருதி  வேகன் ஆர் அவான்ஸ்
மாருதி  வேகன் ஆர் அவான்ஸ்
பண்டிகை காலத்தை முன்னிட்டு அனைத்து கார் நிறுவனங்களும் சிறப்பு பதிப்பினை அறிமுகம் செய்து வருகின்றது.  வேகன் ஆர் காரிலும் அவான்ஸ் என்ற பெயரில் கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.
 வேகன் ஆர் அவான்ஸ் காரின் தோற்றத்தில் புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கரிங் , கன்மெட்டல் வண்ணம் கொண்ட ரூஃப் ரெயில் மற்றும் ரியர் ஸ்பாய்லர் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது. 
உட்புறத்தில் இரட்டை வண்ண டேஸ்போர்டு , ரியர் பவர் விண்டோஸ் , ஃபேபரிக் இருக்கை , 2 டின் ஸ்டீரியோ ஆடியோ சிஸ்டம் பூளூடூத் தொடர்பு மற்றும் சென்ட்ரல் லாக்கிங் , கீலெஸ் என்ட்ரி மற்றும் செக்கியூரிட்டி அலாரம் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.
மாருதி  வேகன் ஆர் அவான்ஸ்
 மாருதி சுசூகி வேகன் ஆர் அவான்ஸ் மூன்று வண்ணங்களில் மட்டுமே கிடைகும். அவை வெள்ளை , கிரே மற்றும் சில்வர் ஆகும்.
 மாருதி வேகன் ஆர் அவான்ஸ் விலை விபரம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்)
  • வேகன்ஆர் LXI பெட்ரோல் – ரூ.4.30 லட்சம்
  • வேகன்ஆர் LXI CNG-  ரூ.4.84 லட்சம்
Maruti WagonR Avance launched

Comments