மாருதி வேகன் ஆர் காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ்

மாருதி வேகன் ஆர் காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல் வரும் நவம்பர் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.  வேகன் ஆர் காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தவிர வேறு எந்த மாற்றங்களும் இருக்காது.

மாருதி வேகன் ஆர்

மாருதி வேகன் ஆர் கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வரும் மாடலாகும் . மாருதி செலிரியோ , ஆல்டோ கே10 காரினை தொடர்ந்து மூன்றாவது ஆட்டோ கியர் ஷிஃப்ட் பொருத்தப்பட்ட மாடலாக வேகன் ஆர் விளங்கும்.

67 ஹெச்பி ஆற்றலை வழங்கும் 1.0 லிட்டர் கே வரிசை பெட்ரோல் என்ஜிட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 90என்எம் ஆகும் . இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் விற்பனை செய்யப்படுகின்றது.

நவம்பர் முதல் வாரத்தில் டீலர்களுக்கு டெஸ்பேட்ச் செய்யப்பட உள்ள வேகன்ஆர் ஏஎம்டி காரின் தோற்றத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது. பின்புறத்தில் ஏஜிஎஸ் பேட்ஜ் பதிக்கப்பட்டிருக்கும். மேலும் LXI மற்றும் VXI வேரியண்டில் மட்டும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வரவுள்ளது. மாருதி சுசூகி வேகன் ஆர் ஏஎம்டி மாடல் ரூ.25,000 வரை கூடுதலான விலையில் இருக்கும்.

ads

 Maruti Wagon R AMT to launch on November month 

Comments