மாருதி ஸ்விஃப்ட் குளோரி பதிப்பு விற்பனைக்கு வந்தது – updated

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் காரில் குளோரி எடிசன் என்ற பெயரில் சிறப்பு பதிப்பினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மாருதி ஸ்விஃப்ட் குளோரி பதிப்பில் பல நவீன அம்சங்களை பெற்றிருக்கும்.

மாருதி ஸ்விஃப்ட்
மாருதி ஸ்விஃப்ட் 

என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் இல்லலாமல் பாடி ஸ்டிக்கரிங் மற்றும் கூடுதல் துனைகருவிகளை மட்டுமே இந்த சிறப்பு பதிப்பில் பெற இயலும் . மாருதி ஸ்விஃப்ட் குளோரி பதிப்பில் பாடி கிராஃபிக்ஸ் மிக ஸ்போர்ட்டிவாக உள்ளது.

ஸ்விஃப்ட் குளோரி பதிப்பில் பாடியின் மேற்கூரை , ரியர் ஸ்பாய்லர் ,  விங் மிர் சிவப்பு வண்ணத்தினை பெற்றுள்ளது. மேலும் பக்கவாட்டிலும் பாடியிலும் ரேசிங் ஸ்டிரிப் கொடி பயன்படுத்தியுள்ளனர்.

மாருதி ஸ்விஃப்ட்

உட்புறத்தில் இரட்டை வண்ண டேஸ்போர்டு , கருப்பு சிவப்பு வண்ண கலவையில் இருக்கைகள் , ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர்நாபில் கவர் , பூளூடூத் இனைப்புடன் கூடிய ஆடியோ சிஸ்டம் , ரியர் வியூ கேமரா , ரியர் பார்க்கிங் சென்ஸார் போன்றவற்றை ஸ்விஃப்ட் சிறப்பு பதிப்பில் பெற இயலும்.

ads

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை. VXi/VDi டாப் வேரியண்டில் மட்டுமே இந்த சிறப்பு குளோரி பதிப்பு கார்கள் கிடைக்கும்.

மாருதி ஸ்விஃப்ட் குளோரி பதிப்பு விலை விபரம்

ஸ்விஃப்ட் குளோரி VXi – ரூ.5,36,477
ஸ்விஃப்ட் குளோரி VDi – ரூ.6,52,591

(எக்ஸ்ஷோரூம் சென்னை )

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட்

Maruti Swift Glory Edition to launched details

Comments