மாருதி ஸ்விஃப்ட் SP சிறப்பு பதிப்பு விரைவில்

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரில் எஸ்பி என்ற பெயரில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு பதிப்பினை அறிமுகம் செய்ய உள்ளது. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரின் சிறப்பு பதிப்பு Lxi மற்றும் Ldi  என்ற வேரியண்டில் வரும்.

Maruti Swift SP Special Edition

ஸ்விஃப்ட் SP ஹேட்ச்பேக் காரின் சிறப்பு பதிப்பில் சில கூடுதல் வசதிகளை இணைத்து விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. மற்றபடி என்ஜினில் மாற்றங்கள் இருக்காது.

மாருதி ஸ்விஃப்ட் SP பதிப்பில் பனி விளக்குகள் , ஆடியோ சிஸ்டம் , ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் , 4 ஸ்பீக்கர்கள் , பூளூடூத்,  யூஎஸ்பி தொடர்பு , சென்ட்ரல் லாக்கிங் , கீலெஸ் என்ட்ரி , ஸ்போர்ட்டிவ் இருக்கை கவர் மற்றும் ஸ்டீயரிங் வீல் கவர் , பாடி வண்ணத்தில் ஓஆர்விஎம் , 4 கதவுகளுக்கும் பவர் விண்டோஸ் போன்ற பல நவீன அம்சங்களை பெற்றிருக்கும்.

Maruti Swift SP Special Edition

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு என்ஜின் ஆப்ஷனிலும் வரவுள்ளது. மாருதி ஸ்விஃப்ட் SP காரின் பின்புறத்தில் எஸ்பி பேட்ஜ் பதிக்கப்பட்டிருக்கும். ஸ்விஃப்ட் எஸ்பி இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வரலாம்.

ads

மாருதி ஸ்விஃப்ட் SP தொடக்க விலை ரூ.5.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் டெல்லி ஆகும்.

Maruti Swift SP Special Edition Launching Soon

imagesource

Comments