மெர்சிடிஸ் பென்ஸ் GLE எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

ரூ.58.90 லட்சத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் GLE எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் GLE எஸ்யூவி

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி காரில் 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்சுடன் 2 விதமான டீசல் என்ஜின் ஆப்ஷனில் வந்துள்ளது. முந்தைய M கிளாஸ் எஸ்யூவி காரின் புதிய மாடல்தான் GLE எஸ்யூவி காராகும்.

தோற்றம்

மிரட்டலான ஸ்போர்ட்டிவ் தோற்றத்துடன் விளங்கும் GLE எஸ்யூவி காரில் முன்பக்கத்தில் இரண்டு ஸ்லாட்களுக்கு மத்தியில் மெர்சிடிஸ் லோகோ பதிக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகளை பெற்றுள்ளது.

உட்புறத்தில் 7” தொடுதிரை அமைப்பு , மூன்று ஸ்போக் ஸ்டீயரிங் வீல் , கமென்ட் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , ஆம்பியன்ட் லைட்டிங் , போன்ற சிறப்பான அம்சங்களை பெற்றுள்ளது.

ads

மெர்சிடிஸ் பென்ஸ் GLE எஸ்யூவி

GLE எஸ்யூவி என்ஜின் விபரம்

GLE 250 d 4MATIC வேரியண்டில் 204பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.1 லிட்டர் ட்வீன் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 500என்எம் ஆகும். 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 8.6 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

GLE 350 d 4MATIC வேரியண்டில் 258பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் வி6 டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 620என்எம் ஆகும். 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 7.1 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

இந்தியாவில் முதன்முறையாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 9 வேக G-TRONIC ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது. மேலும் ஸ்போர்ட் , எக்னாமி மற்றும் மெனுவல் என மொத்தம் மூன்று விதமான டிரைவிங் மோட் ஆப்ஷனை கொண்டுள்ளது.

 சிறப்பு வசதிகள்

ஜிஎல்இ எஸ்யூவி காரில் 4 மேட்டிக் ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் , 360 டிகிரி மேமரா , கீலெஸ் 6 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இஎஸ்பி , பிரேக் அசிஸ்ட் ஏர்மேட்டிக் சஸ்பென்ஷன் என பல வசதிகளை பெற்றுள்ளது.

பாகங்களை தருவித்து இந்தியாவிலே ஒருங்கினைக்கபட உள்ள ஜிஎல்இ எஸ்யூவி காரின் போட்டியாளர்கள் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 , வால்வோ எக்ஸ்சி90 மற்றும் ஆடி க்யூ7 .

மெர்சிடிஸ் பென்ஸ் GLE எஸ்யூவி விலை 

  • GLE 250 d 4MATIC : ரூ.58.90 லட்சம்
  • GLE 350 d 4MATIC : ரூ. 69.90 லட்சம்
{ டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை }

Mercedes-Benz GLE SUV launched in India

Comments