மெர்சிடிஸ் பென்ஸ் S63 ஏஎம்ஜி நாளை முதல்

பெர்ஃபாமென்ஸ் ரக செடான் மெர்சிடிஸ் பென்ஸ் S63 ஏஎம்ஜி  நாளை இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் தொடர்ந்து புதிய மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் S63 ஏஎம்ஜி
மெர்சிடிஸ் பென்ஸ் S63 ஏஎம்ஜி 

S கிளாஸ் கார் மாடலில் இருந்து பெர்ஃபாமென்ஸ் ரக AMG S63 கார் உருவாக்கப்பட்டுள்ளது. எஸ் கிளாஸ் காரை விட 100 கிலோ எடை குறைவானதாக எஸ் 63 விளங்கும்.

577பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்த 5.5 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 900என்எம் ஆகும். இதில் 7 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் S63 ஏஎம்ஜி  கார் 0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 4.4 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

ads

ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்63 ஏஎம்ஜி கார் மற்ற நாடுகளில் விற்பனையில் உள்ளது.

மேலும் படிக்க ; மெர்சிடிஸ் எஸ்63 ஏஎம்ஜி கூபே விற்பனைக்கு வந்தது

நாளை விற்பனைக்கு வரும்பொழுது இன்னும் பல செய்திகளை தெரிந்து கொள்ளலாம் இணைந்திருங்கள்………….

Comments